பக்கம்:என் சுயசரிதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

டத்தால் காலவியோகமாக வக்கீல் வேலையில் முன்பே குறைந்திருந்த ஆர்வம் மிகவும் குன்றியது. ஆகவே ஸ்ரீமான் சர் சி. பி. ராமசாமி ஐயர் அவர்கள் 1924-ஆம் ஆண்டு என்னை அழைத்து ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜ் வேலையை ஒப்புக் கொள்கிறாயா என்று கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன், இதனுடன் என் நடுப்பருவ அனுபவங்களை முடித்துக் கொள்கிறேன்.

முதிர் பருவம்

நான் எனது 51-வது வயதில் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாக நியமிக்கப்பட்டேன். எனக்கு 55 வயதானவுடன் அவ் வயதிற்குமேல் கவர்ன்மெண்ட் உத்தியோகத்திலிருந்து விலக வேண்டும் என்னும் நியமனப்படி அவ் வேலையிலிருந்து! விலகினேன். இதனிடையே சில மாதங்கள் சீப் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டாக வேலை பார்த்தேன். மேற்கண்டபடி ஜட்ஜாக இருந்தகாலத்தின் சில வியவகாரங்களை இங்கு எழுதுகிறேன்.

நான் ஜட்ஜாக முதல் நாள் உட்கார்ந்தபோது வக்கீல்களின் தரப்பாக காலஞ்சென்ற ஸ்ரீமான் சேஷாச்சாரியார் அவர்கள் என்னை வரவேற்று சில வார்த்தைகள் பேசியபோது அதற்கு நான் பதில் சொன்னபோது “நான் ஜட்ஜ் வேலை நடத்துங்கால் மனிதர் எவருக்கும் பயப்படாது தெய்வம் ஒன்றிற்கே பயந்து நடப்பேன்” என்று உரைத்தது ஞாபகமிருக்கிறது. அதன்படி தினம் நான் கோர்ட்டிற்குப் போய் என் நாற்காலியில் உட்காரு முன் நியாயப்படி விசாரித்து தீர்மானம் கொடுக்க எனக்கு புத்தியையும் மன உறுதியையும் கொடுக்கும்படியாக ஈசனைத் தொழுத பிறகே உட்காருவேன். சாதாரணமாக 25 வருடங்களுக்கு மேல் ஸ்மால்காஸ் கோர்ட்டில் வக்கீலாக வியவஹாரங்கள் நடத்திய படியால் இக்கோர்ட்டில் ஜட்ஜ் வேலை பார்ப்பது எனக்கு சுலபமாக இருந்தது.

ஸ்மால்காஸ் கோர்ட் வியாஜ்யங்களைப் பற்றி சில விஷயங்கள் எழுத விரும்புகிறேன். என் தமயனார் 1894-ஆம் வருஷம் வக்கீலாக வியவஹாரம் நடத்திய போது இந்த சின்ன கோர்ட்டில் மாத்திரம் 32 ஆயிரம் வியாஜ்யங்களுக்குக் குறையாமலிருந்தன! அது குறைந்து கொண்டே வந்து. நான் 1898-ஆம் வருஷம் வக்கீலானபோது சுமார் 25 ஆயிரம் கேசுகள் வருடத்திற்குத் தீர்மானிக்கப்பட்டன. நான் ஜட்ஜான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/37&oldid=1112836" இலிருந்து மீள்விக்கப்பட்டது