பக்கம்:என் சுயசரிதை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

யங்களை அனுப்பும்படி சீப் ஜட்ஜிக்கு வேண்டுகோள் அனுப்புவேன். ஒரு சமயம் முதல் ஜட்ஜும் மூன்றாவது ஜட்ஜும் ஏதோ அவசர நிமித்தமாய் கோர்ட்டுக்கு வராமவிருந்தபோது மூன்று கோர்ட் கேசுகளையும் நான் கவனித்தது ஞாபகமிருக்கிறது

சாதாரணமாக 4 மணிக்குள் கோர்ட் வேலையை முடித்துக் கொண்டு சபைக்குப் போய் விடுவேன். சாயங்காலம் ஐந்து மணியானவுடன் எந்த வியாஜ்யமானாலும் நடத்தாது வாயிதா போட்டுவிடுவேன். ஐந்து மணிக்குமேல் கோர்ட் நடப்பது தவறு என்பது என் அபிப்பிராயம். நான் வக்கீலாக இருந்தபோது ஐந்து மணிக்கு மேல் வியாஜ்யங்களை நடத்துவதை ஆட்சேபித்திருக்கிறேன். 1926-ஆம் வருஷம் நான் ஜட்ஜாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை இங்கு எழுதுகிறேன். முன்னாள் இரவு மரித்த என் மனைவியின் தேகத்தை இடுகாட்டிற்குக் கொண்டு போய் சம்ஸ்காரம் செய்தவுடன் வீட்டிற்கு வந்து ஸ்நானம் செய்துவிட்டு பூஜையை வழக்கம் போல் முடித்துவிட்டு உணவு கொண்டு கோர்ட்டுக்கு வழக்கம் போல் போனேன். அப்பொழுது. சுமார் 11 மணியிருக்கும். இதற்குள் எனக்கு துக்ககரமான சம்பவத்தைக் கேள்விப்பட்டு முதல் ஜட்ஜாக இருந்த ஸ்ரீமான் திருவேங்கடாச்சாரியார் நான் அன்று கோர்ட்டுக்கு வரமாட்டேனென்று என் கோர்ட் வியாஜ்யங்களை யெல்லாம் வாய்தa போடுவதற்காக தன் கோர்ட்டுக்கு மாற்றிக்கொண்டார். நான் கோர்ட்டுக்கு வந்ததாகக் கேள்விப்பட்டவுடனே என் அறைக்கு வந்து துக்கம் விசாரித்துவிட்டு “மிஸ்டர் சம்பந்தம் இன்றைக்கு ஏன் கோர்ட்டுக்கு வந்தாய்” என்று கொஞ்சம் வெறுப்புடன் கேட்டார். அதற்கு நான் “என்னை மன்னிக்க வேண்டும். என் மனைவி நோயாயிருந்தபோது என்னால் இயன்ற அளவு சிகிச்சை செய்து பார்த்தேன். இறந்த பின் துக்கப்பட்டு என்ன பயன். என் மனதைத் தேற்றிக் கொண்டேன். என்னுடைய துக்கம் என்னுடனிருக்க வேண்டும். என்னால் மற்றவர்களுக்குக் கஷ்டம் கொடுப்பதில் என்ன பலன்? இன்றைக்கு என் கோர்ட்டில் வாதிப் பிரதிவாதிகளும் சாட்சிகளும் சேர்த்து சுமார் 100 பெயர்களிருக்கலாம். இத்தனை பெயர்களும் மற்றொரு நாள் வரும்படியான கஷ்டத்திற்கு நான் அவர்களை உள்ளாக்கக் கூடாதென்று தீர்மானித்து வந்தேன் இங்கு; அன்றியும் கோர்ட்டுக்கு வந்து வேலை பார்த்தால் என் துக்கத்தைக் கொஞ்சம்மறந்திருப்பேன்” என்று சொல்லி அவரை என் கோர்ட் வியாஜ்யங்களையெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/39&oldid=1112838" இலிருந்து மீள்விக்கப்பட்டது