பக்கம்:என் சுயசரிதை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

சாபாபதி ஜமீன்தார்:-- இது ஒரு ஹாஸ்ய நாடக மென்று நான் கூறாமலே தெரியும். இதைப் பேசும் படக் காட்சிக்காகவே எழுதி அச்சிட்டேன். 1948-ஆம் வருஷம். மேடை நாடகமாட பெரும்பாலும் கூடும். அவ்வாறு ஆடப்பட்டுமிருக்கிறது.

மனை ஆட்சி:-- இது எனது நண்பர் ஸ்ரீமான் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதிய Domesticatioil of Damoo என்னும் ஆங்கில நாடகத்தின் தமிழ் அமைப்பு. இது ரேடியோ நாடகமாக ஆடப்பட்டிருக்கிறது.

சதி சக்தி:-- இது ஒரு பிரஹசனம் அல்லது ஜாஸ்ய நாடிகையாம். இது ரேடியோவுக்காக எழுதப்பட்டது.

தீயின் சிறு திவலை:-- இதை என் வயோதிகத்தில் எழுதிய ஒரு முக்கியமான நாடகமாக கொள்கிறேன். இதை 1939-ஆம் வருஷம் ஒரு பேசும் படக் கம்பெனிக்காக எழுதிமுடித்தேன். இப்பிரயத்தனம் முடிவு பெறாமல் போகவே பிறகு 1947-ஆம் ஆண்டு இதை அச்சிட்டேன். இதை இத்தனை வருடம் நான் அச்சிடாமலிருந்ததற்குக் காரணம் இது வரையில் ஆங்கில ராஜ்யத்தில் அடங்கியிருந்த நமது தேசம் நமது சுயராஜ்யத்திற்கு வந்ததேயாம். 1947-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் 15ந் தேதி வரையில் எங்கு இந்நூல் முன்பிருந்த துரைத்தனத்தாரால் தங்களுக்கு விரோதமாக அச்சிடப்பட்டதென்று எண்ணுகிறார்களோ என்று சிறிது அச்சப்பட்டேன். பிறகு 1947 -ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ந்தேதி அந்த அச்சம் அறவே நீங்கவே இதை அச்சிட்டேன். இது நாடக மேடைக்கும் பேசும் படக் காட்சிக்கும் உபயோகப்படும் என்பது என் துணிவு.

தீபாவளி வரிசை:--- இது சில வருடங்களுக்கு முன்பு எழுதியது. எந்த வருடம் என்று எனக்கு சரியாக ஞாபக மில்லை. இதை 1947-ஆம் வருஷம் அச்சிட்டேன்.

கலையோ காதலோ:-- இதை நான் நாடகமாக எழுத ஆரம்பித்தது 1935-ஆம் வருஷம். அச்சமயம் நான் பம்பாய்க்கு ஓர் பேசும்படக் காட்சிக்காக போயிருந்தேன். பிறகு இதை பேசும்படமாக மாற்றினால் நன்றாய் இருக்குமென தீர்மானித்து அதற்கு தக்கபடி மாற்றினேன். இதை எழுதும் போது என் மனத்திற்கு பூரண திருப்தியில்லா விட்டால் மேலே போவதில்லை என்னும் தீர்மானப்படி பன்முறை தடை பட்டது. இதை நான் முதிர் வயதில் எழுதிய சிறந்த நாடகங்களில் ஒன்றாக மதிக்கின்றேன். இதை யாராவது பேசும் படமாக மாற்றினால் அதை பார்க்க வேண்டுமென்ற ஆசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/51&oldid=1110150" இலிருந்து மீள்விக்கப்பட்டது