பக்கம்:என் சுயசரிதை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

இரண்டு முறை சினிமா தணிக்கை சங்கத்தில் ஒருவனாக கவர்ன்மெண்ட்டாரால் நியமிக்கப்பட்டேன்.

1946 --ஆம் வருஷம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் “மனைவியால் மீண்டவன், சிக்ஹௗ நாதன்” எனும் நாடகங்களில் முறையே பாகம் எடுத்துக் கொண்டேன். இவ்வருஷம் ஏப்ரம் மாதம் சென்னையில் ஒற்றவாடை நாடகசாலையில் நடந்த தமிழ் எழுத்தாளர் மகா நாட்டில் தமிழ் பத்திரிகை காட்சியை திறந்துவைத்தேன். அன்றியும் இவ்வருஷம் சுகுண விலாச சபையார் தசரா கொண்டாட்டத்தில் கபிர்தாஸ் என்னும் நாடகத்தில் ராம்சிங் வேஷம் தரித்தேன்.

1947-ஆம் வருஷம் சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேஷன் கொண்டாட்டத்தின் வேஷப் போட்டியில் பரிசு பெற்றேன். இவ்வருஷம் எனக்கு 75-வது வருடப் பிறப்பு நாளை சுகுண விலாச சபையார் கொண்டாடி எனக்கு ஒரு வந்தனோபசார பத்திரிகை அளித்தனர். இதை எனது பால்ய நண்பராகிய வி, வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்கள் கரத்தினின்றும் பெரும் பாக்கியம் பெற்றேன் கடவுள் கிருபையால். அச்சமயம் சபையார் நடத்திய காலவரிஷி என்னும் எனது நாடகத்தில் சுபத்திரையின் வேலையாளாக நடித்தேன்.

இவ்வருஷம் வெலிங்டன் சினிமா சாலையில் வினோத வரியை (Entertainment tax) கவர்ன்மெண்ட்டார் உயர்த்திய தற்காக ஆட்சேபனை செய்வதற்காக கூடிய கூட்டத்தில் தலைமை வகித்து முக்கியமாக நாடகங்களுக்கு வரியை போடலாகாது என்று பேசினேன். இவ்வருஷம் ஏப்ரல் மாதம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆந்திரர்கள் காலஞ்சென்ற ஸ்ரீமான் ராகவாச்சார்லு அவர்களின் உருவப்படத்தைத்திறந்து வைத்தபோது என்னையும் அவரது நட்புத் திறமையைப்பற்றி பேசவேண்டுமென்று கேட்டபோது அவ்வாறே செய்து என் காலஞ்சென்ற நண்பருக்கு நான் செலுத்தவேண்டிய கடனை சிறிதளவு செய்தேன். ஏப்ரல் மாதம் சுகுண விலாச சபையார் தெலுங்கில் நடத்திய துரௌபதி மான சம்ரட்சணம் எனும் நாடகத்தில் பிராதிகாரி என்னும் சிறு வேஷம் பூண்டேன். இச்சபையின் இவ்வருஷத்திய தசரா கொண்டாட்டத்தில் சகுந்தலை நாடகத்தில் கொத்தவாலாக நடித்தேன். தெலுங்கு பாஷையில், இவ்வருட கடைசியில் எங்கள் சபையார் நடத்திய ‘நந்தனார்’ எனும் தமிழ் நாடகத்தில் என் பழைய வேடமாகிய கோமுட்டி செட்டியாராக நடித்தேன், இவ்வருஷம் சவுத் இண்டியன் ஆத்லடிக் அசோசியேஷன் நடத்திய வருடாந்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/60&oldid=1112852" இலிருந்து மீள்விக்கப்பட்டது