பக்கம்:என் சுயசரிதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

நூலில் ஒருவனுக்கு கிழ வயது. 70 ஆண்டில் ஆரம்பிக்கிறது என்று குறிக்கப்பட்டிருக்கிறது.

என் வரைக்கும் என்னுடைய 75-வது ஆண்டில்தான் நான் கிழவனாக என்னை மதிக்கலானேன். அதற்கு முக்கிய காரணம் அதுவரையில் என் கண்பார்வை நன்றாய் இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக குறையலானதுதான். முதலில் இதை நான் அதிகமாக கவனிக்கவில்லை. ஒருநாள் சினிமா சென்சாராக நான் ஒரு படத்தைப் பரர்க்கவேண்டி வந்தபோது கொஞ்சம் கஷ்டப்பட்டேன். உடனே நான் ஒரு கண் வைத்தியரிடம் காட்டியபோது அவர் “இதொன்றுமில்லை, சினிமா படங்களை நீ பல வருடங்களாக சென்சாராக வேலை பார்த்ததினால் உனது கண் அதிர்ச்சி அடைந்து பலஹீனப்பட்டிருக்கின்றது” என்று சொல்லி ஒரு மூக்குக் கண்ணாடியை உபயோகிக்கும்படி சொன்னார். சாதாரணமாக 40-ஆம் ஆண்டில் கண்கள் பலஹீனப்பட்டு ‘சாலேஸ்வரம்’ என்னும் கண் நோய் வருவது வழக்கம். சாலேஸ்வரம் என்னும் பதமே ‘சாலீஸ்’ என்னும் ஹிந்துஸ்தானி பதத்திலிருந்து வந்ததாம். சாலீஸ் என்றால் 40 என்று அர்த்தம். எனக்கு இந்த சாலேஸ்வரம் வரவே இல்லை. அப்படியிருக்க எனது 75-வது வயதில் இக் கஷ்டம் ஆரம்பித்தபோது பல வைத்தியர்களுக்கு காண்பித்து வினவினேன். அவர்களுள் சில ஆங்கில வைத்தியர்கள் (Allopathic) உன் கண் பார்வை மட்டமாகி வருவதற்குக் காரணம் சிறுவயது முதல் சிறு எழுத்துக்களில் அச்சிடப்பட்ட புஸ்தகங்களை எந்நேரமும் படித்துக் கொண்டிருந்தபடியால்தான் என்று கூறினர். மற்றும் சிலர் ‘நீ சினிமா சென்சாராக இருந்து படங்களை அடிக்கடி பார்க்க வேண்டியபடியால் இந் நோய் வந்திருக்கவேண்டும்’ என்றார்கள். ஒரு ஆயுற்வேத வைத்தியருக்கு என் கண்களை காட்டி வினவியபோது அவர் என்னை “நீ வாரத்திற்கு இருமுறை அப்யங்கான ஸ்நானம் (எண்ணெய் தேய்த்து குளித்தல்) செய்து வருகிறாயா"? என்று கேட்டார். அவருக்கு உரைத்த உண்மையை இங்கு எழுதுகிறேன் “1926-ஆம் ஆண்டில் என் மனைவி தேக வியோகமானாள். உடனே வந்த தீபாவளிமுதல் நான் அப்யங்க ஸ்நானத்தை விட்டுவிட்டேன்” என்று கூற, அவர் “அதனால் தான் மூளை சூட்டினால் உன் கண் கெட்டு போயிருக்கிறது என்று கூறினார்” அதன் பிறகு கண் வைத்தியர்களிடம் பன்முறை காட்டிய போது “இது கேடராக்ட் (Cataract) என்னும் வியாதி இது முற்றினால் ஒழிய ஆபரேஷன் (Operation) செய்யக்கூடாது” என்று கூறிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/67&oldid=1112858" இலிருந்து மீள்விக்கப்பட்டது