பக்கம்:என் சுயசரிதை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒருகாசும் கோர்ட் செலவிற்காக செலவழிக்கவில்லை. இவ்விஷயத்தைப்பற்றி என் அருமைத் தந்தையார் பன்முறை கூறிய ஒரு பழமொழி இப்பொழுது ஞாபகமிருக்கிறது. அதாவது “இருபது குடுமிகள் ஒன்றாய் சேர்ந்து வாழும். இரண்டு கொண்டைகள் சேர்ந்து வாழமாட்டா” என்பதாகும். இந்த நன்மையை யோசித்து இதை வாசிக்கும் எனது நண்பர்கள் என் தகப்பனாருடைய கோட்பாட்டைக் கடைபிடித்து நடப்பார்களாக. ஐரோப்பியன் முதலியவர்கள் குடும்பங்களில் அண்ணன் தம்பிகள் சண்டை, ஓரவத்திகள் சண்டை, மாமி மருமகள் சண்டை என்பதே ஏறக்குறைய கிடையாது என்று கூறலாம். ஒரு ஐரோப்பியன் அவன் அரசகுமாரனாக யிருந்தபோதிலும் மணம் செய்து கொண்டவுடன் பிரத்யேக குடும்பஸ்தனாய் வாழவேண்டியதுதான். இக்கோட்பாட்டை கவனியாது என் சொந்த பந்துக்களில் பல குடும்பங்களில், ஒன்றாய் வாழ்ந்து கொஞ்சகாலத்திற்கெல்லாம் சண்டை சச்சரவு நேரிட்டு குடும்பங்கள் அழிந்துபோய் இருக்கின்றன என்று நான் பல உதாரணங்கள் கொடுக்க முடியும். இக்காரணம்பற்றியே இதை சற்று விவரமாய் எழுதினேன். அவிபக்த குடும்பமானது பூர்வகாலத்து நாகரீகத்திற்கு ஏற்றதாயிருந்தது. தற்காலத்திய நாகரீகத்திற்கு தனித்தனி குடும்ப வாழ்வே மிகவும் ஏற்றதானது என்பதற்குத் தடையில்லை.

கடன் இல்லா வாழ்வே கண்ணிய வாழ்வாம்

இதை நன்றாய் அறிந்திருந்த எனது தந்தையார் பல வருடங்கள் கடனின்றி வாழ்ந்துவந்தார். ஆயினும் எங்கள் எழும்பூர் பங்களாவைக்கட்ட ஆரம்பித்தபோது அது முடிவாவதற்கு தான் போட்ட திட்டத்திற்கு இரு மடங்கிற்குமேல் செலவாகிவிட்டது. ஆகவே அவர் கடன் வாங்கவேண்டிவந்தது. அவர் அந்திய காலத்தில் இக்கடன் சுமார் 8000 ரூபாய் ஆயிற்று. அதற்காக அவர் மாதம் மாதம் 40 ரூபாய் வட்டி கொடுக்கவேண்டியதாய் வந்தது. அவர் காலமானவுடன் அவர் சொற்படி என் அண்ணன் ஐயாசாமி முதலியாரும் நானும் அந்தக் கடனை முதலில் தீர்த்துவிடும்படி தீர்மானித்தோம். அதற்காக எங்கள் எழும்பூர் பங்களாவை குடிக்கூலிக்கு விட்டுவிட்டு இப்போது நானிருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டோம். அவர் கருமாந்திரமானபின் ஒரு மாதத்திற்கெல்லாம் எங்கள் மனைவிகளை அழைத்து எங்கள் குடும்ப நிலையை அவர்களுக்குத் தெரிவித்து அவர்கள் போட்டுக் கொண்டிருந்த நகைகளில் கட்டுக்கழித்திகளுக்கு இருக்கவேண்டிய முக்கியமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/74&oldid=1112863" இலிருந்து மீள்விக்கப்பட்டது