பக்கம்:என் தந்தை தாயர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

ஏமாந்த இரண்டு திருடர்கள்

[அங்கம்-1


படுத்துகினு துரங்கினேன். பொழுது சாயரத்துக்கு ஒரு நாழிக்கி முன்னே-என் காலெ வந்து நக்கி எழிப்பிச்சி, நானு எழுந்து-புடிச்சிகினு வந்துட்டேன். ஊட்டுக்கு.

பக். அப்போ -- அது ரொம்ப --- சுலபமான வேலெ தான் ---

பலே. ஆமாம் அண்ணா -- ஆனா -- ஒடம்பெல்லா நோவுதுகாட்டிலே பருக்காங்கல் மேலே படுத்துகினு தூங்கினது -- ஒரு பாயும் தலையாணியும் மாத்திரம் எடுத்துகினு-போயிருக்கிறேன்-- ரொம்ப சுகமாயிருக்கும். அண்ணா - உங்களே நாளேக்கு இந்த வேலெ பாக்கச் சொன்னா -ஒரு பாயும் தலையாணியும் எடுத்துகினு போங்க, உம்-உங்க வேலெ என்னமாயிருந்தது அண்ணா?

பக்.என் வேலெ ஒண்ணும் கஷ்டமே இல்லேடா தம்பி -- அந்த கீரெ பாத்தி வெத்தலெ தோட்டத்துக்குப் பக்கத்துலே ஆத்துக்கால் போவுதே, அங்கேயிருக்குது. அத்தொட்டு அங்கே யிருக்கிர கெணத்துலே தண்ணி நெறையே இருக்குது. கிணத்துப்படியிலே கூட எறங்கவேண்டியதில்லே - இப்படி குனிஞ்சிகினு தோண்டியாலே மொண்டு பாத்திக்கு ஊத்தி விடலாம். அரெ நாழியிலே என்வேலெயெ முடிச்சூட்டேன். அத்தெ சொன்ன வேறெ என்னமானலும் வேலெவைக்கப் போராருண்ணு, வூட்டுக்கு வந்து "என்னங்க-வேலெ ரோம்ப கஷ்டமா யிருக்குதுங்க. பாதி தான் ஆச்சி-எனக்கு ரொம்ப எளப்பாயிருக்குது கொஞ்சம் பழயது போட்டைங்கண்ணா சாப்பிட்டூட்டு, போயி மீதி வேலெயும் முடிச்சூடரேன்” இண்ணா கேட்டேன்-கெழவனாரு -- ரொம்ப மனசு எளகினவரு - உடனே உள்ளே போயி பழயது கொண்டு வந்து போட்டாரு -- தம்பி, நாளைக்கு ஒரு வேளெ உன்னே இந்த வேலெபாக்கச் சொல்லுவாரு; நான் சொன்ன மாதிரி சொல்லு; உனக்கும் வெய்யில்லேற பழயது போடுவாரு-அத்தெ சாப்பிட்டு