பக்கம்:என் தந்தை தாயர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 6]

ஏமாந்த இரண்டு திருடர்கள்

11


பக். சரிதான்! நானு அண்ணனெ ஏமாத்தப் போயி, அவன் என்னெ ஏமாத்தி என் வாயிலே மண்னெ போட்டான் சரி - இந்த தோண்டிக்கி வைக்கலாவது அடைச்சி பாக்கலாம் !

காட்சி முடிகிறது.

ஆறாம் காட்சி

இடம்--அப்பாசாமி முதலியார் வீட்டுத் தெருத் திண்ணே.

காலம்--இரவு

பக்காத் திருடன், ஒரு திண்ணையின் மீது படுத்துக் கொண்டிருக்கிறான், பலே திருடன், மெல்ல வந்து மற்றொரு திண்ணையில் படுக்கப் பார்க்கிறான்.

பக். அடே தம்பி, ஏண்டாப்பா அந்த திண்ணையிலே படுக் கப் போரே வழக்கத்தெப் போலெ இங்கேயே வந்து படு-நான் கோவிச்சக்கலே !- நீ என்னெ மோசம் செய்ததும்- நானு உன்னெ மோசம் செய்ததும் சரியாப் போச்சி.--

பலே. இல்லே அண்ணா - எனக்கு ஒடம்பு ஒரு மாதிரியா யிருக்குது - அல்லாம் நாளெ காலமே பேசிக்கலாம் - இப்போ எனக்கு ரொம்ப தூக்கம் வருது.

பக். அல்லாம் தூங்கலாம் சிக்கீரம்-ஒண்ணுமாத்திரம் எனக்கு சொல்லிவுடு-மாட்டுப் பின்னலே தான் ஒட வைச்சையே, பாழும் இந்தப் பாயி தலையாணியே ஏண்டா தூக்கிகிணு போக வைச்சே.

பலே. மத்யான சாப்பாடு வாயிலேதாம் மண்ணு உழுந்துதே நீங்க மாத்திரம் நார்த்தாங்க ஊறுகா வேறே ஏன் கேக்க சொன்னேங்கோ ?-அது மாத்திரம் நீங்க செய்யலாமோ !

பக். போன போவட்டும், நம்போ ஒருத்தரே ஒருத்தரு இப்படி ஏமாத்திகினு இருந்தா என்ன பிரயோஜனம் ? இந்த கெழத்தெ ஏமாத்தி அந்த பொட்டிலே இருக்கர சொத்தெ அமுக்கிகினு போவரத்துக்கு வழியே பாருடா அப்பா.