பக்கம்:என் தந்தை தாயர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-6) ஏமாந்த இரண்டு திருடர்கள் 13

அப்பாசாமி முதலியார், ஒரு பெட்டியை வாயிற்படிக்கி இழுத்துக்கொண்டு வருகிறார். பக். இப்படி கொடுங்க-நாங்க தூக்கிகினு வர்றோம் கிணத்து வரைக்கும். பலே.அண்ணா-உங்களுக்கு என்னுத்துக்கு கஷ்டம்-நான் ஒருத்தனே துக்கி வுடுவேனே. (பெட்டியைத் தலைமேல் தாக்கிக் கொள்கிறான்) இதென்ன எனக்கு இது ஒரு பளுவா ? (மூவரும் வீட்டிற்கருகிலுள்ள கிணத்தண்டை போகிறார்கள்) அ. அடே அப்பா, ரெண்டு பேருமா ! புடிச்சி கெணத்தும் நடுப்பிலே போட்டுடுங்கோ. பக்.ஆமாங்க-போட்டுட்டா-நாளெக்கு காலமே நம்பொ இத்தெ என்னமா எடுக்கறது ? அ.அது கஷ்டமில்லே-பாதாள கொலுசெ உட்டு, மாட்டி இழுத்து டலாம். அதுக்குத்தான், கயித்துலே சுற்றி முடிச்சிங்க போட்டிருக்கரேன் பாருங்க. பக்.சரிதான் சரிதான்,-அந்தப்பக்கம் பிடிடா தம்பி கெணத்துநடுவுலே போடணும்-பக்கத்திலே கிணத் திலே பட்டா-பொட்டி ஒடஞ்சி பூடும். (இருவருமாகத் தூக்கி கிணற்றில் பெட்டியைப் போட்டு விடுகிறார்கள்) அ.சரிதான் நீங்கரெண்டு பேரும் ரெண்டு பக்கம் படுத் துங்க : ஒருத்தர் மாத்தி ஒருத்தர் முழிச்சிகினு இருங்க காவலா-நாளெ காலமே-நான் வர்றேன். (உள்ளே போகிறார்) [இரண்டு திருடர்களும் படுத்துக் கொள்கின்றனர்) காட்சி முடிகிறது.