பக்கம்:என் தந்தை தாயர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[காட்சி.1]

ஏமாந்த இரண்டு திருடர்கள்

3

டும் மார்க்கம்-உனக்கு தெரிவிக்கரேன்-இப்படிக்கு உன் தமயன்-பக்காத் திருடன்”-அண்ணா-இது வரைக்கும் உங்களே மரியாதைக்காக அண்ணா இண்ணா கூப்பீட்டுகினு இருந்தே-இனிமேலே உங்களே வாஸ் தவமா அண்ணாத்தே யிண்ணு கூட்பிடப்போரேன். - (அவன் கையைப் பிடித்துக் கொண்டு) அண்ணாத்தே, இது தான் உங்ககாலு-எப்படியாவது உங்க வித்தை யெல்லாம் எனக்கு கத்துக் கொடுத்து என்னெ கடைத்தேறப் பண்ணனும்.

பக். அப்படியே ஆகட்டும் தம்பி-பயப்படாதே. பலே. அண்ணாத்தே-மத்ததெல்லாம் அப்புறம் கத்துக் கொடுங்க- இப்போ-எந்த சமயத்லே என் இடுப்பிலே சொருகியிருந்ததே எடுத்துப் பாத்தைங்க ? அத்தெ மாத்திரம் இப்பொ-மொதல்லே-சொல்லிடுங்க.

பக். நீ வந்த மொதல் நாளுராத்திரி-எம்பக்கத்திலே உக்காந்து சாப்பிட்டுகினு இருந்தையே-அப்போ

பலே. அப்போ - உங்க கை சாப்பிட்டுகினு இருந்துதே ?

பக். சோத்துகை! பீச்சகை என்ன செய்துது இண்ணு உனக்கு தெரியாது! நம்பொ தொழில்லே ரெண்டு கையும் பழகி யிருக்கணும்-முக்கியமா பீச்சகை-எல்லாரும் அது ஒண்ணும் செய்யாது இண்ணு நெனைச்சிகிவாங்க !-அது தானே நமக்கு நல்லது.

பலே.அண்தே ! இனி மேலே நீங்க எனக்கு அண்ணாத்தே யில்லா-அப்பா ! உங்க, காலே வுட்டு இனி மேலே போவவே மாட்டேன்.-அண்ணா-இண்ணெ ராத் திரிக்கி எங்கே போகலாம்.

பக். இந்த சில்லரே வேலையெல்லாம் வேணாம்-நான் சொல்ரத்தே கேளு-அதோ அந்த ஆத்துக் கப்பாலே தோப்பு தேரியுது பார்-அங்கே எலிமிச்சம் பட்டி இண்ணு ஒரு கிராமம் இருக்குது, அங்கே ஒரு கெழவன் இருக்கரான் ஒரு ஊட்லே, அவன் ரொம்ப பணக் காரென் இண்ணு சொல்ராங்க-ரொம்பநாளா அவன்