பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

என் தமிழ்ப்பணி

அவ்வெண்ணத்தை இப்போதே மறந்து விடுவாயாக” என அவளுக்கு அறிவுரை புகட்டினாள்.

கொடுமையே செய்யினும் கொண்டானை மறந்து விடுதல் குடிப்பிறந்தார்க்குக் கூடாது எனக் கருதும் அப் பெண்ணின் பேருள்ளம் வாழ்க.

“கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப
நீல நிறப் பெருங்கடல் பாடு எழுந்து ஒலிப்ப,
மீன்ஆர் குருகின் மென்பறைத் தொழுதி
குவை இரும் புன்னைக் குடம்பை சேர,

5. அசைவண்டு ஆர்க்கும் அல்குறு காலைத்
தாழை தளரத் தூக்கி மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்
காமர் நெஞ்சம் கையறுபு இனையத்
துயரம் செய்து நம் அருளாராயினும்

10. ஆறா அலியரோ அவருடைக் கேண்மை;
அளி இன்மையின் அவனுறை முன்னஇ
வாரற்க தில்ல தோழி! கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை

15. செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்னை
அகமடல் சேக்கும் துறைவன்
இன்துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே”

தினை : நெய்தல்

துறை : தலைமகன் பொருள்வயின் பிரிந்த வழி,
தலைவியின் துயர்கண்டு வருந்திய தோழிக்குக் தலைவி
சொல்லியது.