பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

என் தமிழ்ப்பணி

யெடுத்து வந்த அவர்கள் அனைவரும் தமிழ் நாட்டின் செல்வங்களைக் கொள்ளையிட்டுச் செல்வதில் குறியாய் இருந்தனரேயல்லது தமிழக ஆட்சியைக் கைப்பற்றி ஆள்வதில் குறியாய் இருந்தாரல்லர்.

தமிழ் வேந்தர்

தமிழ்நாடு, மிகப் பழைய காலமாவே, சேர, சோழ பாண்டியர் என்ற மூவேந்தர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது இந்நாட்டை, ‘மூவேந்தர் நாடு’ என்று பெயரிட்டு அழைப்பர், ஆசிரியர் தொல்காப்பியனார். ‘வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு’ என்பது தொல்காப்பியம்

(பொருள்: செய்யுள் 79)

மூவேந்தர் ஆட்சி, மேற்கே நிலவிய உரோமானியப் பேரரசைப் போலவும், கிழக்கே நிலவிய சீனப்பேரரசைப் போலவும், பழமையும் பெருமையும் வாய்ந்த பேரரசாய் திகழ்ந்தது. இவ்வரசுகளை அமைத்த முதல்வர் இன்னார் என்பதை எண்ணத்தால் எண்ணிக்காணலும் ஒண்ணாதாய் உளது. இவர்தம் பழமை பற்றிப் பேசவந்த பெரியோரெல்லாம் “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய முதுகுடி” என்றும் “படைப்புக்காலம் தொட்டு மேம்பட்டு வரும் குடிகள்” என்றுமே கூறி அமைந்தனர்.

இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தே, இந்தியப் பெருநிலப்பரப்பனைத்தையும் தன் ஒரு குடைக் கீழ் வைத்து உலகாண்ட மெளரியப் பேரரசனாம் அசோகனே, சேர, சோழ பாண்டியப் பேரரசுகள், என் ஆட்சி கடங்காப் பேரரசுகளாம் எனக் கூறுவனாயின் இந் நாடுகளின் பழமையும், பெருமையும் கூறத் தக்கன ஆமோ?

வடமொழியின் முதற் பெருங் காவியமாகிய வான்மீக இராமாயணமும், பாரதமும், மூவேந்தர் நாட்டின் நனி