பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

என் தமிழ்ப்பணி


“மணி நீரும், மண்ணும், மலையும்,
அணிநிழல் தாடும் உடையது அரண்”

என்ற வள்ளுவர் வாய் மொழியினைக் காண்க.

“கான் அரனும், மலையரணும், கடல் அரணும் சூழ் கிடந்த கலிங்க பூமி” என அவ்வியற்கையரண்களே எடுத்துப் பாராட்டப் பெறுதலும் காண்க. இவ்வரண் முறையினைக் கருத்தில் கொண்டு, எளிதில் கடந்து செல்லலாகாவாறு, எக்காலத்தும் கரை புரண்டு ஓடும் வெள்ளம் உடையவாகிய பேராற்றங்கரைகளிலேயே தங்கள் தலைநகர்களைக் கண்ட தமிழ் நாட்டுப் பேரரசர்கள், அவ்யாறுகள் ஒவ்வொன்றும், ஓரிடத்தே இரண்டாகப் பிரிந்து சிறிது தூரம் ஓடி மீண்டும் ஒன்று கலந்து ஓட. உண்டாகும்; திருவரங்கம் போலும் ஆற்றிடைக் குறைகள் எல்லா ஆறுகளிலும் உண்டாதல் இயலாது போவதால், ஆறுகள், நகர்களுக்கு ஒரு சார் அரணாகவே அமைதல் கூடும் என்பதை அறிந்து பிற அரண்களையும் பொருந்தும் வகையால் அமைத்து வைத்தனர்.

அவ்வாறு அமைக்க முனைந்த அவர்கள், அந்நால் வகை அரண்களுள், மலையரண் இயற்கையாக அமைதல் இயலுமே அல்லது, அதைத் தாமே ஆக்குதல் இயலாது என்பதை உணர்ந்து, அதை விடுத்து, ஏனைய அரண்களைத் தாமாகவே படைத்துக் கொண்டனர். நகரத்தின் நாற்புறங்களிலும் காடுகளை வளர்த்தனர்.

காட்டரணை அடுத்து ஆழ்ந்து அகன்ற அகழிகளைத் தோண்டினர். நகரைக் கைப்பற்றும் கருத்தோடு வந்து வளைந்துக் கொள்ளும் பகைப்படை, காவற்காட்டை அழிப்பதிலும், அகழியைத் தூர்ப்பதிலும் முனையும் ஆதலின், அவ்வழிவு நிலை இடம் பெறாதவாறு, அப்பகைப்