பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

என் தமிழ்ப்பணி

காவற்கணிகையர், நாடகமகளிர், நகை வேழம்பர் முதலானோர் வாழும் வீதிகளும் ஆண்டே; கடும்பரி கடவுநர் களிற்றின்பாகர், நெடுந்தேர் ஊருநர், கடுங்கண் மறவர் என்ற நாற்படை வீரர்கள் வாழும் வீதிகள் அரண்மனைக்கு அணித்தாகவே அமைந்திருந்தன.13

வடவேங்கடம் தென்குமரிகட்கு இடைப்பட்ட தமிழகம் முழுவதையும் தன் ஆணைக்கீழ்க் கொண்டு வந்து அடக்கிய பின்னர், கரிகாலன், வடநாடுநோக்கிச் சென்றான் ; சென்றானை இமயம் இடைநின்று தடுத்துவிட்டது. அதனால் சினங்கொண்ட சோழன் அதன் உச்சியில் தன் புலி இலச்சினை பொறித்து மீண்டான்; மீளுங்கால் வச்சிர நாட்டு வேந்தன் முத்துப் பந்தலும், மகத நாட்டு மன்னன் பட்டிமண்டபமும் அவந்தி நாட்டு அரசன் தோரணவாயிலும் அளித்து அவனுக்கு நண்பராயினர்; கரிகாலன் ஆங்குப்பெற்ற அவ்வெற்றிச் சின்னங்கள், காவிரிப் பூம்பட்டினத்திற்குச் சிறப்பளித்து நின்றன.14

புகார் நகருக்கு வரும் புதியோர், பொருளின் பெயரும் பொருளுக்கு உரியோர் பெயரும், அப்பொருளின் அளவும் நிறையும் பொறித்துக் கொணர்ந்த பண்டப் பொதிகள்; அவர்கள் ஊர்ப் பொதுவிடத்தே தங்குவதால் காப்பாரற்றுக் கிடப்பக்காணும் கள்வர், அவற்றைக் கவர்ந்து கொண்டால் அவரைக் களவும் கையுமாய்ப் பிடித்துக், களவாடிய பண்டப் பொதிகளை அவர் தலையில் ஏற்றி, நகர் மக்கள் கண்டு நகையாடி வெறுக்குமாறு, நகர வீதியில் வலம். வரப்பண்ணி களவினைக் கனவிலும் கருதாக் கருத்துடையராக்கி அனுப்பும் உயர்நீதி மன்றம் ஒன்றும் அப்புகார் நகரில் இருந்தது.15

தன்நீரில் படித்து மூழ்கித் தன்னை வலம்வரும், கூனர் குறுகிய வடிவினர், ஊமர், செவிடர், தொழுநோயாளர்