பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

என் தமிழ்ப்பணி

காமல் இருக்க முடியவில்லை. கண்டிக்கவே விரும்பினள். விரும்பினாளேனும் கணவனைப் பிறர்முன் வெளிப்படையாகக் கண்டிப்பது முறையாகாது என்பதையும் உணர்ந்தாள். அதனால் அவனைக் கூறுங்கால் ஆற்றங்கரையிலும் கழனிகளின் வரப்புகளிலும் வளர்ந்து நிற்கும் பயனேதுமில்லா நாணல், வயலில் அரும்பாடுபட்டு விளைவிக்க வளர்ந்து நிற்கும் பயன்மிகு கரும்புபோல் பூத்துக் காட்சி அளிக்கும் நாடுடையவன் நம் தலைவன் என்று கூறுமுகத்தான். பயன்மிகு கரும்பும் பயனிலா நாணலும் ஒருசேரப் பூத்திருப்பது போலவே அவன் காதல் மனைவியாம் என்னையுல் காசு மகளாம் பரத்தையையும் ஒன்றாகவே மதிக்கின்றான்; என்னே! அவன் கொடுமை எனக் கூறாமல் கூறினாள். இவ்வாறு கருப்பொருளின் நிலை கூறிக். கருத்தை உய்த்துணர வைப்பதே உள்ளுறை.

“கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்னும் யாமே
அல்லன் என்னும் எம்தடமென் தோளே”

-ஐங்குறுநூறு

யார் யார் உள்ளுறை கூறுவதற்கு உரியவர்; யார் யார் என்னென்ன பொருள்களை உள்ளுறையாக மேற்கொள்ளலாம் என்பதற்கான இலக்கணங்களையும் தொல்காப்பியர் கூறியுள்ளார். தலைவி தான் வாழும் நிலத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும் அறிந்தவளல்லளாதலின், அவள் கூறும் உள்ளுறை அவளறிந்த பொருளாகவே இருத்தல் வேண்டும். தோழி அவள் வாழும் நிலத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும் அறிந்தவளே ஆயினும், பிற நிலத்திற்குச் சென்று வந்தவள் அல்லளாதலின் அவள்