பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

என் தமிழ்ப்பணி



“நெஞ்சே என் சொல்லை ஏற்று, என் பின் வரின் காதலியை நினைந்து விரைந்து மனைநோக்கி மீளாது, வினையை நினைந்து விரைந்து வழி மேல் செல்வதே சிறப்புடைத்து; அதுவே அவளுக்கும் மகிழ்ச்சி தரும் என்பதை உனக்கு விளங்க எடுத்துரைக்கின்றேன்; அதை விளக்கும் அரிய காட்சிகளையும் காட்டிக் கொண்டே செல்கிறேன்; என்னைப் பின் தொடர்ந்து வருக. நெஞ்சே! நாம் செல்லும் வழியில் மராமரம் மலர்ந்து மணம் நாறி நிற்கும்.

ஆங்கு வீசும் தென்றற்காற்று மலர் பறிக்க வல்லானொருவன், மலரைப் பறிக்கத் தன் கைக் கோலால் கிளைகளை அலைக்கழித்தல்போல், மராமரத்துக் கிளைகளை, அலைக்கழித்து, அம்மலர்களை வழிச் செல்லும் மக்களின் தலை முடியில் சென்று உதிருமாறு செய்யும்.

நெஞ்சே! காற்றின் செயல் கொடுமை வாய்ந்ததாகத் தோன்றினும் அக்காற்று இல்லையேல் அம்மலர்கள் மலர்ந்தும் பயனிழந்து போயிருக்கும். அக்காற்று வீசியதால் அதன் மணம் காற்றில் பரவிப் பயன் பெற்றது. அம்மலரும் மக்கள் முடியில் படிந்து மாண்புற்றது அந்நிகழ்ச்சி, நம் பிரிவு முயற்சி நம் காதலிக்குக் கொடுமை புரிவதாகாது. மாறாக வாழ்வுப் பயனை அவள் அடையுமாறு பண்ணி, பிறரையும் வாழ்விக்கப் பண்ணும் என்ற உண்மையை. உணர்த்தாதோ?

“நெஞ்சே! மராமரக் காட்சியைக் கடந்து சென்றால் காட்டுப் பன்றியை செந்நாய் தாக்கும் காட்சியைக் காண்பை; செந்நாய் வாளாவந்து பன்றியைத் தாக்காது. மலைக்குகையில் குட்டி ஈன்ற தன் காதற்பிணவு பசியால் வருந்துவதைப் பொறாதே, அது கேழவைத் தாக்கும்; அந்நிகழ்ச்சி மனைவி மகிழுமாறு மாநிதி ஈட்டி வருவது கணவன் கடமையாம்: அக்கடனாற்றச் செல்வான், இடைவழியில்