பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

29

நெஞ்சு வருந்தும் கொடுமை புரியினும் கேடின்றாம் என்ற உண்மையை உணர்த்தாதோ?

“நெஞ்சே! பன்றி செந்நாய் போராட்டத்தையொட்டி நிகழும் பிறிதொரு நிகழ்ச்சி மற்றோர் உண்மையை உணர்த்துவதாய் இருக்கும். கேழலோடு தொடர்ந்து வரும் பெண் பன்றி தன் காதலனைச் செந்நாய் தாக்கக் கண்டதும், தன் காதலனுக்குத் துணையாய் நின்று நாயோடு பொரிட நினையாது, அவை போராடும் அவ்விடத்தில் நிற்கவும் அஞ்சி, கண்மண் தெரியாமல் கடுவேகமாக ஓடிவிடும். அவ்வாறு ஒடுங்கால் எதிரே ஈச்சமரம் நிற்பதையும் அறியாது, அதன்மீது மோதிக் கொள்ளும். பன்றியால் மோதுண்ட அவ்வீச்சமரத்துக் காய்கள் கனிந்து உதிர்வதற்கு மாறாகச் செங்காய்களாகவே உதிர்ந்து மண்ணில் வீழ்ந்து பாழாம்.

இக்காட்சியும் நிகழ்ச்சியும் கணவன் கடமை மேற்கொண்டு உழைக்கும்போது, அவன் மனைவி அவனுடன் இருந்து உறுதுணை புரிவதை விடுத்து அவ்வினை கண்டு வெருண்டு அகன்றால், அதனால் அவளும் வாழ்விழப்பள்: தன்னை அடுத்து வாழ்வாரையும் வாழ்விழக்கப் பண்ணுவள் என்ற உண்மையை உணர்த்தாவோ?

“நெஞ்சே! அவ்விடத்தையும் கடந்து சென்றால் காட்டு வழியைக் கடந்து செல்வோரின் நீர் வேட்கையை நீக்கி உதவும் உயர்ந்த உள்ளம் கொண்ட சிலர், ஆங்குக் கிணறு ஒன்று எடுக்கத் தொடங்கி, ஓரளவு எடுத்ததும், அதில் நீர் ஊறாமை கண்டு இதில் நீர் ஊறாது என எண்ணி, அதை அந்நிலையிலேயே விட்டுச் சென்ற ஆழ்ந்த பள்ளம் ஒன்று தோன்றும்.

அவ்வழியாக வரும் யானைக்கூட்டம், அதைக் கண்ணுற்றதும் அது தம் வெண்கோடுகள்பால் விருப்பம் கொண்டு தம்மை வேட்டையாடிப் பிடிக்க எண்ணிய வேடர், வெட்டி,