பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

என் தமிழ்ப்பணி

வைத்த பள்ளமாம் எனப்பிறழ உணர்ந்து, அதைத் தூர்த்துப் பாழ் செய்யும், இக்காட்சி நாட்டிற்கு நற்பயன் அளிக்கும் கருத்தோடு தொடங்கும் வினை விரைந்து பயனளிக்காமை கண்டு, இடையே கைவிட்டு விடுதல் கூடாது. வெற்றி காணும் வரை தொழிலாற்றுதல் வேண்டும். இடையே விடின், அது காணும் பிறமக்கள், அவ்வினை தம்மை வாழ்விழக்கத் தொடங்கப் பெற்ற வினையாம் எனப் பிறழ உணர்ந்து அதை அழிக்க முனைவர். அதைப் போலவே நல்லெண்ணம் கொண்டு நான் தொடங்கிய இவ்வினை, நம் காதலிக்குக் கேடு சூழத் தொடங்கியது என்ற பிழைபட்ட உணர்வால் நீ தடை செய்ய, இடையிலேயே நின்று விடுமாயின் நீள் பழியாம் என்பதை உணர்த்துவதாகாதோ? -

“நெஞ்சே! என்னோடு வந்து, அக்காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் நேரில் கண்டால், உன் அறிவும் திருந்தும்; ஆகவே, எழுந்து என்னைத் தொடர்ந்து விரைந்து வருக” எனக்கூறி மேலே செல்லத் தொடங்கினான்.

“மனையிள நொச்சி மெளவல் வான்முகைத்
துணைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல்
அவ்வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ்மென் கூந்தல், தடமென் பனைத்தோள்,

5. மடந்தை மாணலம் பசப்பச் சேய்நாட்டுச்
செல்லல்; என்று யான் சொல்லவும், ஒல்லாய்,
வினை நயந்து அமைந்தனை; ஆயின், மனைநகப்
பல்வேறு வெறுக்கை தருகம்; வல்லே
எழுஇனி வாழி என் நெஞ்சே! புரியிணர்.

10. மெல்ல விழ அஞ்சினை புலம்ப, வல்லோன்
கோடு அறை கொம்பின், வீ உகத்தீண்டி,
மரா அம் அலைத்த மணவாய்த் தென்றல்
சுரம் செல் மள்ளர் சுரீயல் தூற்றும்
என்றூழ் நின்ற புன்தலை வைப்பில்