பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

என் தமிழ்ப்பணி



செய்யுட்குப் பொருள் கூறத் தொடங்குவதன் முன்னர் பொருள் கொள்வதற்கு ஏற்ப, சொற்களையும் சொற்றொடர்களையும் முன்னும் பின்னுமாகக் கொண்டு கூட்டுவதும் தொகைச் சொற்களை விரிப்பதும் செய்வர். அதன்பின் சொற்பொருள் கூறுவர். அதையடுத்து அவ்வாறு பொருள் கூறும் நிலையில்; விளங்கப்பொருள் சொல்லாது விடுத்த சொற்களுக்கான பொருளை விரிவாகக் கூறுவர் பின்னர் ஒரு சொல் அல்லது ஒரு தொடருக்குத் தாம் கொண்ட பொருளேயன்றி கொள்ளலாகும் பிற பொருள் ஏதேனும் இருப்பின் அது கூறி, அவ்வாறு கொள்வதன் அமைதி அமைதி இன்மைகளை விளக்குவர்.

இறுதியாக ஒவ்வொரு சொல்லையும் தொடரையும் எடுத்துக் கொண்டு அவற்றை ஆண்டிருப்பதால் காணலாகும் சொல்நயம் பொருள் நயங்களையும், பெறலாகும் வேறு பிற விளக்கங்களையும் விரிவாக எடுத்துக் கூறி படிப்போர் உள்ளத்தில் பாட்டும் பொருளும் பளிங்கென ஒளிவிடச் செய்து விடுவார்.

“திருவளர் தாமரை” என்ற தொடருக்குத் “திருவளரும் தாமரைப் பூவினையும்” என்று பொருள் கூறிய பின்னர், திரு என்னும் சொல்லைத் தனியே பிரித்துப் பொருள் கூறத் தொடங்கியவர், “திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்” எனப் பொது நிலையில் கூறி, அதையடுத்து, திருவென்பது. கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு” என்று அதற்கு மேலும் ஒரு பொருள் விளக்கம் கூறியுள்ளார்.

பின்னர் தாம் அவ்வாறு பொருள் கோடற்காம். அமைதியினை விளக்குவான் வேண்டி, “இஃது என் சொல்லியவாறே வெளின், யாவன் ஒருவன் யாதொரு பொருளைக் கண்டானோ, அக் கண்டவர்க்கு அப்பொருள் மேற்சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு; அதன்மேல்