பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

35

அவற்கு விருப்பஞ்சேறல் அதனிற் சிறந்த உருவும் நலனும் ஒளியும் எவ்வகையானும் பிறிதொன்றிற்கு இல்லாமையால் திரு என்றது அழகுக்கே பெயராயிற்று என விளக்கம் தந்துள்ளார். அத்துடன் அமையாது” கோயிலைத் திருக்கோயில் என்றும். கோயில் வாயிலைத் திருவாயில் என்றும். அலகைத் திருவலகு என்றும் பாதுகையைத் திருவடிநிலை என்றும் வழங்கும் இத்தொடக்கத்தன எல்லாம் திருமகளை நோக்கி எழுந்தன அல்ல; அது கண்டவனுடைய விருப்பத்தானே எழுந்தது; ஆதலாலும் திருவென்பது அழகென்றே அறிக அதனால் திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கமே என உலக வழக்கை எடுத்துக்காட்டித் தாம் கொண்ட பொருளுக்கு அரண் செய்யும் அழகுணர்ந்து, இன்புறற்கு உரித்து.

“திருவளர் தாமரை” என்ற தொடருக்குத் “திருவளரும் தாமரைப் பூவிளையும்” எனப்பொருள் கூறிப் பின்னர் “திருமகள் தங்கும் தாமலர் எனினும் அமையும்” எனக் கொள்ளலாகும் வேறு பொருள் கூறியவர், அதுவும் தாம் கொண்ட முன்னையை பொருளோடு தொடர்புடையதே அல்லது முரண்பட்டது அன்று என்பதனை விளக்க, எல்லாராலும் விரும்பப்பட்ட அழகு அவட்கு உண்டாகையாலே திருமகள் என்று பெயராயிற்று. அங்ஙனம் பெருமை யுடையவளும், இதன் சிறப்பு நோக்கியே இதனில் இருந் தாளல்லது, தன்னாலே இதற்குச் சிறப்புப் பெறவேண்டி இருந்தாள் அல்லள். ஆதலான் தாமரைக்கு ஒத்ததும் மிக்கதும் இல்லை; அங்ஙனம் பெருமையுடையவளாலும் விரும்பப்பட்டதர்தலான் திருவென்பது கண்டாரால் விரும்பபடும் தன்மை நோக்கம் என்பது பெற்றாம்” என அளிக்கும் வாதம், அறிவுச் செறிவு வாய்ந்த வாதமாதல் அறிந்து அகம் மகிழ்ந்தற்கு அரியதன்றோ!

தாமரைக்கு அடையாக வந்துள்ள “வளர்” என்ற காலம் கரந்த பெயரெச்சத்திற்கு “வளரும் தாமரை” என