பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

என் தமிழ்ப்பணி

நிகழ்காலம் பொருள் தோன்ற பிரித்துவிட்டு, உம்மை நிகழ்காலம் குறிப்பதன்று, மூன்று காலத்தையும் குறிப்பதாகும். இறந்த காலம், நிகழ்காலம், வரும் காலமாகிய மூன்று காலங்களிலும் நிகழும் நிகழ்ச்சியை “உம்” ஈறு உணர்த்தும் என்பதை உணர்த்துவான் வேண்டி, “இது வழக்கினும் வருவதுண்டோ எனின் உண்டு; அது ஞாயிறு திங்கள் இயங்கும்; யாறு ஒழுகும். மலை நிற்கும் என்றற்றொடக்கத் தனவற்றான் அறிக, “முன்னிலைக் காலமும் தோன்றும் இயற்கை அம்முறை சொல்லும் நிகழும் காலத்து மெய் நிலைப் பொதுச் சொல் கிளத்தல் வேண்டும்” என்ற தொல்காப்பிய விதியை மேற்கோள் காட்டி “ஆகலின், உம்மைச் சொல் வரும் காலத்தையே காட்டாது, மூன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்கும் என்றே அறிக என முடிப்பதும், அவர்தம் இலக்கண விளக்கத்திற்கு விழுமிய தோர் எடுத்துக்காட்டாம்.

மருத நிலத்துத் தாமரை, நெய்தல் நிலத்துக் காவி, முல்லை நிலத்துக் குமிழ், பாலை நிலத்துக் கோங்கு, குறிஞ்சி நிலத்துக் காந்தள் ஆகிய ஐந்து மலர்களைக் கூறியிருப்பது கொண்டு, “ஓரிடத்து ஒரு கலியாணம் உண்டானால், எல்லாரிடத்தும் உண்டாகிய ஆபரணங்களெல்லாம் அவ்விடத்துக் கூடி, அக்கலியாணத்தைச் சிறப்பித்தாற். போலப் பல நிலங்களும் இக்குறிஞ்சியையே சிறப்பித்து நின்றன. எனக் கூறும் விளக்கமும், “திருவளர் தாமரை”, “சீர் வளர்காவி”, “குருவளர் பூங்குமிழ்”, “பைங்காந்தள் எண் ஒவ்வொரு மலருக்கும் சிறப்பு அடை கொடுத்துக் கூறிய ஆசிரியர், கோங்கு மலர்க்கு மட்டும் அடைகொடாது “கோங்கு” என வாளா கூறியது கொண்டு, “இதற்கு அடை கொடாதது பாலைநிலம் செல்லுதல் நோக்கி, என்னை பாலைக்கு நிலம் இன்று ஆக்லான்” எனக்கூறும் விளக்கமும், சொல்லாட்சி அமைதி காணும் அவர்தம் அறிவு நுட்பத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாம்.