பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

என் தமிழ்ப்பணி

வரைவினைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை உணர்த்தி வரைவிற்கு வழி செய்து மீண்டாள்.

“நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அல்லலைக்
கடல்பாடு அழிய இனமீன் முகந்து.
துணைபுணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி


5. உப்பு ஒய் உமணர் அருந்துறை போக்கும்
ஒழுகை நோன்பகடு ஒப்பக் குழீஇ
அயிர்திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப்
பெருங்களம் தொகுத்த உழவர் போல
இரந்தோர் வறுங்கலம் மல்கவீசிப்

10. பாடுபல அமைத்துக் கொள்ளை, சாற்றிக்
கோடுஉயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ? ஒருநாள்
மண்ணாமுத்தம் அரும்பிய புன்னைத்
தண்நறும் கானல் வந்து நும்

15. வண்ணம் எவனோ என்றனிர் செலினே?”

திணை : நெய்தல்

துறை தலைமகற்குத் தோழி வரைவு கடாயிக்
கூறியது.

புலவர் : முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்.

1. வலந்த; கட்டப்பெற்ற; குறுங்கண்; சிறிய சிறிய கண்கள்.

2. பாடு: பெருமை;

3. பரதமாக்கள்: நெய்தல் நிலத்து மீன் பிடிப்பவர்கள்;

4. துவன்ற; கூடி இருந்து;</poem>}}