பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6. இறையனார் அகப்பொருள் உரை

இறையனார் அகப்பொருள் முதல் சூத்திர உரையில் உரை கண்ட வரலாறு பற்றிய விளக்கம் அளிக்கும் பகுதியில் “நக்கீரனால் உரைகண்டு, குமாரசுவாமியால் கேட்கப்பட்டது” எனவரும் தொடர்கொண்டு, இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவர் எனக் கொள்வர் சிலர்.

நக்கீரனார் கடைச் சங்கப்புலவர்: கடைச்சங்க இலக்கியங்களில் கட்டளைக் கலித்துறை இடம்பெறவில்லை: கட்டளைக் கலித்துறைக்குத் தொல்காப்பியரும் இலக்கணம் வகுக்கலில்லை; மேலும் கோவை எழுந்த காலம் கடைச் சங்க காலத்திற்கும் பின்னர் நானூறு ஆண்டுகள் கழிந்த பிற்காலம்: அங்ஙணமாக, கடைச்சங்க காலத்தவராகிய நக்கீரர், தமக்கு நானூறு, ஐந்நூறு ஆண்டுகள் பிற்பட்டுத் தோன்றிய, கோவையாரிலிருந்து கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களை மேற்கோள் காட்டியிருக்க இயலாது; ஆனால் இறையனார் அகப்பொருள் உரையில் கோவையாரின் கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் காட்டப்பெற்றுள்ளன.

எழுத்து, சொல், பொருள். யாப்பு, அணி என்ற ஐந்திலக்கணங்களைக் கூறும் தொல்காப்பியம், இறவாது இன்று வரை கிடைக்கவும், “அரசனும் புடைபடக் கவன்று” என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே; பொருளதிகாரம்