பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

49



ஆகவே அவ்வுரை பொருந்தாது எனவும், கந்தருவ ஒழுக்கத்தில், கந்தருவ ஆணும் பெண்ணும் தமியராய் இருந்தே புணர்வர் ஆதலின், களவு ஒழுக்கம், கந்தருவ ஒழுக்கத்தோடு ஒக்கும் என்று கூறவே, அவளும் அவனும் தமியராய்ப் புணர்வர் என்பது தானாகவே புலப்படும்.

ஆகவே அவன் இளைஞர் கூட்டத்திலிருந்து நீங்கித் தனியனாய் வந்தும், அவள் தோழியர் கூட்டத்திலிருந்து நீங்கித் தனியளாய் வந்தும் புணர்வர் என்பது உணர்த்தவே, “தானே அவளே” என்றார், எனக் கூறுவதும் கூறியது. கூறலாம்.

ஆகவே அவ்வுரையும் பொருந்தாது எனப், பிறர் கூறும் உரைப் பொருள்களை மறுத்து விட்டு, உருவாலும், திருவாலும், அறிவாலும், ஒழுக்கத்தாலும் ஆடவருள் குறைந்தவர் அல்லது ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவன் என அவனை ஆடவரிலிருந்து பிரித்து உணர்த்தவும், அது போலவே, அவளை மகளிரிலிருந்து பிரித்து உணர்த்தவுமே, “தானே அவளே” என்றார் என்ற தான் கூறும் பொருளை முதற்கண் நிலைநாட்டி விட்டுப் பின்னர், அவ்வுரைக்குக் “கந்தருவ ஒழுக்கத்தோடும் ஒக்கும் என்று கூறிய தனாலேயே, எவ்வகையாலும் குறைபாடு இலாதவர் என்பது பெறப்படும். ஆகவே அவ்வாறு கூறுவதும் பொருந்தாது” எனத் கூறும் மறுப்புரைக்குக் கந்தருவர் எவ்வகையாலும் குறைபாடு இலாதவர் எனக் கோடல் முறையாகாது. அறிவுக் குறைபாடும், அருள் உணர்வுக் குறைபாடும் அவர்க்கு உண்டு. ஆகவே, கந்தருவ ஒழுக்கத்தோடு ஒக்கும் என்பதினாலேயே, அவனும் அவளும் ஒப்பாரும். மிக்காரும் இலாதவர் என்பது பெறப்பட்டு விடாது.

ஆகவே அதைத் தனியே எடுத்துக் கூற வேண்டியது இன்றியமையாதது என அத்தடைக்கு விடையளித்து விட்டுத் தான் கூறிய பொருளே முடிந்த பொருளாம் என முடித்திருக்கும் நயம் வியந்து பாராட்டிற்கு உரியது.