பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

என் தமிழ்ப்பணி


இவ்வாறு தடை விடைகளால் பொருள் விளக்கிச் செல்லுங்கால் அப்பொருளை மேலும் எளிதாக்குவான் வேண்டி சிலபல உவமைகளை மேற்கொள்வதும், மேற்கொள்ளும் உவமைகளை மிகமிக உயர்ந்தனவாகக் கொள்வது சிறந்த உரைக்கு இலக்கணமாம். அகப்பொருள் உரையாசிரியர் இத்துறையிலும் சிறந்த விளங்குகிறார்; இவ்வொரு சூத்திரத்திற்கு உரை வழங்குவதற்கு உள்ளாகவே பத்துக்கும் மேற்பட்ட உவமைகளை அடுக்கடுக்காக மேற்கொண்டு உரைக்கு மெருகூட்டியுள்ளார்.

தலைமகளைக் காணும் காட்சியும் தலைமகனுடைய ஞான வொழுக்கக் குணங்களது தன்மை அழிவும் ஒருசேர நிகழும் என்பதை விளக்க, இருட்டகத்து விளக்குக் கொண்டு புக்கக்கால் விளக்கு வாராத முன்னரும் இருள் நீங்காது விளக்கு வந்த பின்னரும்; இருள் நீங்காது விளக்கு வருதலும் இருன் நீக்கமும் உடனே நிகழும் என்பதையும்,

“யாயும் யாயும் யாராகியரோ;” என்பது போல் எங்கோ பிறந்த அவனும் எங்கோ பிறந்த அவளும் அப்பொழிவிடை ஒன்று கலந்த நிகழ்ச்சியை விளக்க வடகடல் இட்ட ஒரு நுகம் ஒரு துளை தென்கடல் இட்ட ஒரு கழி சென்று கோத்த நிலமையையும்,

காதலன் உடன் இருக்கக், காதலிக்கு ஆற்றாமை உண்டாகாது என்பதை விளக்க நீருடை நிலத்து நிவந்த நீள்மரம் வெப்பத்தால் தெறப்படா நிலைமையையும் உவமை காட்டிச் செல்லும் கவின் கற்றுக் களித்தற்கு, உரியவாம்.

தடைவிடைகளைக் கையாண்டும். ஏற்புடைய உவமைகளை, மேற்கொண்டும் உரைவிளக்கம் கூறும் நிலையில் இடையிடையே வரும் சிற்சில சொற்களுக்கும். சிறுசிறு தொடர்களுக்கும் முடிந்த முடிவான பொருள் கூறிச்