பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

என் தமிழ்ப்பணி

அகப்பொருள் ஆசிரியர் மிக நயம்படச் செய்து முடித்துள்ளார். “தெய்வப் புணர்ச்சி, முன்னுறு புணர்ச்சி, இயற்கைப் புணர்ச்சி. என்பனவற்றுள் ஒன்று சொல்லாது காமப் புணர்ச்சி என்றே கூறிய காரணம் என்னையெனின் பலகாரணத்தினாய பொருளை ஒரு காரணத்தினாற் சொல்லுவது சிறப்புடைமை நோக்கி என அவர் கூறும் அமைதியின் அழகைக் காண்க.

அரசன் அவன் நிலைக்கு ஏற்ப உயர்ந்த ஆடை அணிகளை அணிவதும் அவன் கீழ்ப் பணிபுரியும் ஏவலாளன், அவனுக்கேற்ற ஆடை அணிகளையே ஏற்பதும் உலகியல்: அதுபோலவே மிக உயர்ந்த ஒரு நூலுக்கு உரையெழுதும் உரையாசிரியர், அவ்வுரை இலக்கியச் செறிவு வாய்ந்த சிறந்த நடையாக இருக்கவே விரும்புவர்: அகப்பொருள் உரை, எதுகையும் மோனையும் இனிய ஓசையும் நிறைந்த அழகு நடையாகவே அமைந்துள்ளது. அவ்வுரையைப் படிக்குங்கால், நாம் ஓர் இலக்கண நூல் படிக்கின்றோம் என்ற நினைவே எழுவதில்லை; மாறாகச் சிறந்த ஓர் இலக்கிய உலகில் புகுந்திருப்பது போன்ற உணர்வே உண்டாகின்றது.

இளையர் தற்சூழச் செல்லும் தலைமகன் செலவு குறிக்கும் பகுதியும் தாரகை நடுவண் தண்மதி போலச் செல்லும், தலைமகள் செலவு குறிக்கும் பகுதியும் இளமயில் ஆடுவது நோக்கித் தலைமகள் நிற்பதைக் குறிக்கும் பகுதியும் காமன் போலச் சென்று, தலைமகன் தலைமகள் முன் நிற்பதை உணர்த்தும் பகுதியும், பிறவும், உரையாசிரியரின் இலக்கியச் செறிவு வாய்ந்த உரைநடைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாம்.

ஒரு சூத்திரத்துக்கு உரை எழுதப் புகுந்த இவ்வுரையாசிரியர் இலக்கண விளக்கம் அளிப்பதோடு அமையாது அவ்விளக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மேற்கொண்ட