பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

63

டையன. அத்தகையான் யார் எனின், அருட் கற்புடையாளும், அவ்வக அருளை வெளிக்காட்டும் ஒளி விளங்கும் நெற்றியை உடையாளும் இந்திரன் மகளுமான தெய்வ யானையின் கணவன் ஆவன்.

“உலகம் உவப்ப வலன் ஒர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு
ஓவு அற இமைக்கும் கேண் விளங்கு அவர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை” (1-5)

பொருள் : உலகம் உவப்ப-உலகத்து உயிர்கள் எல்லாம் வியந்து மகிழ பலர் புகழ் ஞாயிறு-உலகத்து அனைத்து சமயத்தவராலும், அனைத்து நாட்டவராலும், புகழப்படும் ஞாயிற்றை. கடல் கண்டாங்கு-கடலின் அடிவானத்தே கண்டாற்போல் ஓவு அற-இருவகை இந்திரியங்களும், தாம் செல்லுதற்குரிய பொருள்கள் மேல் சென்று தங்குதல் இல்லையாக இமைக்கும்-கண் இமைத்துப் பார்ப்பதற்குக் காரணம் ஆகும். கேண் விளங்கு அவர் ஒளி-கட்புலனார் நோக்குவார் கண்ணிடங்கள் எல்லாவற்றினும் சென்று விளங்கும் ஒளி விளையும்,

உறுநர் தாங்கிய- தன்னை வந்தடைந்த அடியார்களின் துன்பங்களைப் போக்கி அவர்களுக்கு அருள் செய்த மதன் உடை-அழிகினை உடைய நோன்தாள்- ஆற்றல் மிக்க கால்களையும், செறுநர் தேய்த்த-அழித்தற்கு உரியவர்களை அழித்த, செல் உறழ்- இடியேற்றினும் ஆற்றலில் மேம்பட்ட, தடக்கை- வவிமைமிகு கைகளையும் உடைய, மறுஇல் கற்பின்-மறக்கற்பு இல்லாத அறக் கற்பினையும். வாள் நுதல் கணவன்-ஒளி பொருந்திய நெற்றியினையும் உடைய இந்திரன் மகள் தெய்வயானையின் கணவனே!