பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

என் தமிழ்ப்பணி

அதனால்இடம் நோக்கிப் பெய்யாது, எங்கும் பெய்து, இரு நிலைகளையும் பெற்றுவிடும் மழை நீரைக் குறைகூற இயலாது; ஆனால், அறிவு அத்தகையதன்று; நல்லன தீயன உணரும் ஆற்றல் வாய்ந்தது. அதனால், அது, நல்லோர் தீயோர்களை இனங்கண்டு உறவு கொள்ளுதல் வேண்டும்: தீயோர் இனத்தினைக் குறுகாது நல்லார் இனத்தை நாடி அடையும் அறிவே நல்லறிவாம். இவ்வளவு அருமையான கருத்துக்களையும்-

“நிலத்து இயல்பால் நீர் திரிந்தற்று ஆகும்; மாந்தர்க்கு
இனத்து இயல்பதாகும் அறிவு.”

என்ற குறள் வெண்பாவால் உணர்த்தியுள்ளார் வள்ளுவப் பெருந்தகையார்.