பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. மனமும் இனமும்

செயல், புறத்தே நிகழ்வது; உணர்வு அகத்தே எழுவது , செயல் புலப்படக்கூடியது: உணர்வு புலப்பட மாட்டாதது. புறத்தே நிகழும் செயல் அகத்தே எழும் உணர்வை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். அதுவே இயற்கையுமாகும். உணர்வு ஊற்றெடுக்கும் அகமும், அவ்வுணர்வை வெளிப்படுத்தும் நாவும், அதன் வழிச் செயல்படும் மெய்யும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவாகும் இம்மூன்று நிலையாலும், மனிதர் தூய்மையுடையராதல் வேண்டும். இதை வலியுறுத்தவே, உண்மை, வாய்மை, மெய்ம்மை என ஒரே பொருள் குறிக்க, மூன்று சொற்களைப் பெற்றுளது தமிழ் மொழி, உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்வுத் தூய்மையை உணர்த்துவது உண்மை. வாயடியாக எழும் சொல்லின் தூய்மையை உணர்த்துவது வாய்மை. மெய் அடியாக எழும் செயல் தூய்மையை உணர்த்துவது மெய்ம்மை.

சொல்லும் செயலும், உணர்வை அடிப்படையாகக் கொண்டே எழும். உணர்வின்றிச் சொல் எழாது. உணர்வின்றிச் செயல் நிகழாது. உணர்வு உண்டாகிவிடின், அது தொடர்பாகச் சொல் எழுவதையோ, செயல் நிகழ்வதையோ தடுத்து நிறுத்த இயலாது. அவைதாமாகவே எழும்: நிகழும், ஆகவேதான் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆகிய செயல் பற்றியதே அறம் ஆயினும், அவற்றிற்கு அடிப்படை அறவுணர்வே என்பதால், “மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறம்” என அறத்தை மனத்தின் தொழிலாகக் கூறினார் வள்ளுவர். தாம் கூற விரும்பியனவற்றை வள்ளுவர் குறளினும் சுருங்கிய வாய்பாட்டால்