பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

83

மலைகள் பலவற்றைக் கடந்து வருகிறான். அவன் தொழிலோ வேட்டையாடுவது; வேட்டையில் எதிர்ப்படும் விலங்குகளில், அவன் ஆற்றலுக்கு மிஞ்சியனவும் சில இருக்கும்; அவற்றால் அவனுக்கு ஊறு நேர்தலும் உண்டாம் என்ற எண்ணம் எழ அலைபாய்ந்தது அவள் உள்ளம். அதனால் அவள் செயலிழந்து கிடந்து வருந்தத் தலைப்பட்டாள்.

தினைப்புனத்தில் தம்மை ஓட்டுவார் இல்லாமையால் கிளிகள் தம் விருப்பம் போல் தினைக்கதிர்களைக் கொய்து சென்றன. தினை கதிரீன்று விட்டது என்றாலும் அக்கதிர்கள் இன்னமும் முற்றவில்லை.

இன்னும் சில நாள் கழித்தே அவை கொய்யப் பெறுதல் வேண்டும். ஆனால் கிளிகள் அதற்குள்ளாகவே அவற்றைக் கொண்டு போகத் தலைப்பட்டன. அதனால் கதிர் கொண்ட தாளினும் கதிரியிழந்து போன தாள்களே மிகுதியாகக் காட்சி அளித்தன. தினைப்புனத்தின் அவ்வழி நிலையை அப்பெண்ணின் தோழி கண்ணுற்றாள். புனத்தை இவ்வாறு பாழாகவிடுத்து அப்பெண்யாது செய்கிறாள் எனச் சென்று அவளைப் பார்த்தாள். ஆங்கு அவள் சித்தம் பிறழ்ந்தவள் போல் செயலிழந்து கிடப்பதைக் கண்டான், அவளை அணுகி வினாவினாள்.

இளைஞனைக் கண்டது, அவன்பால் காதல் கொண்டது சின்னாட்களாக அவன் வாராமை, அதனால் தன் உள்ளம். படும்பாடு ஆகிய அனைத்தையும் அப்பெண் ஒன்று விடாது உரைத்தாள். அச்செய்தி கேட்டு தோழி நனிமிக நடுங்கி விட்டாள். இவளை ஈன்ற தாய் இவளைத் தன் உயிரினும் சிறந்தவளாக ஓம்புகிறான்.

அவள் இவளை இந்நிலையில் கண்டால் என்னாவது? மகள் மணப்பருவம் அடைந்து விட்டாள்; ஆகவே மணமாகி