பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

என் தமிழ்ப்பணி

விட்டால் இவள் துயர் மறைந்து போம் என உணர்ந்து இவள் காதலைப்பற்றி ஏதும் அறியாமையால் தான் விரும்பும் ஓர் இளைஞனுக்கு இவளை மணஞ்செய்து கொடுத்து விட்டால், இவள் காதலும் கற்பும் என்னாம்?” என எண்ணிக் கவலை கொண்டாள். உடனே, “இதற்கு ஒரு வழி காண வேண்டும்.

இவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அவ்விளைஞனுக்குத் தாயின் இயல்பை எடுத்து உரைத்தல் வேண்டும்; அவளால் தன் காதலிக்குக் கேடு நேர்வதற்கு முன் அவன் இவளை வரைந்து கொள்ள வேண்டிய இன்றியமையாயினை, அவன் உணரும் வகையில் எடுத்து இயம்ப வேண்டும்” எனக் கருதினாள்.

அந்நிலையில் அவனும் அப்புனம் நோக்கி வந்து, கொண்டிருந்தான். புனத்தை அடைந்தவன், பரண்மீது தன். காதலியோடு வேறு ஒரு பெண்ணும் அமர்ந்திருப்பதைக் கண்டு அப்பரணுக்கு அணித்தாக அவர் அறியாவாறு ஒளிந்து கொண்டான். அதைப் பார்த்து விட்டாள் தோழி. உடனே, -

‘பெண்ணே! புனம் - அழிந்து போகிறது. அதை பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாது, காதலனைக் காண வேண்டும்; அவன் இன்னமும் வந்திலன்; வேட்டையாடிக் கொண்டே பல மலைகளைத் தாண்டிவரும் அவனுக்கு வழியில் வேட்டை விலங்குகளால் யாதேனும் இடையூறு நேர்ந்திருக்குமோ என்ற எண்ணம் அலைக்க, இங்கே கிடந்து வருந்துகிறாய்; நம் தாயின் இயல்பு உனக்கு நன்கு தெரியும்.

நாளை அவள் வந்து இப்புனத்தைப் பார்த்தால், உன் நினைவெல்லாம் நிலை குலைந்து விடும். புனத்தில் கிளிகள் வந்து அமரும் இடங்களுக்கெல்லாம் ஓடி ஓடி அவற்றை நீ