பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனர்

85

ஓட்டாமையால், புனத்தில் கதிர் இழந்த தாள்களே மிகுதியாக நிற்பதைக் காணும் தாய், கதிர்கள் முற்றாத இப்போதே இவ்வளவு கேடு; அவை முற்றிவிட்டால் புனம் முற்றிலும் பாழாகி விடும்: இப்போது வரும் சில பறவைகளையும் ஓட்டமாட்டாத இவள், அவை முற்றி விட்டால், பறவைகள் கூட்டங் கூட்டமாய் வந்து படியுமே, அப்போது என்ன செய்வாள்? புனத்தைக் காக்கும் திறம் இவளுக்கு இல்லை என் எண்ணி காவலுக்கு வேறு சிலரை அமர்த்திவிட்டு உன்னை வீட்டிற்கு அனுப்பி விடுவாள்.

அந்நிலை உண்டாகி விட்டால், பின்னர் காதலனைக் காண்பதோ அவனையே உனக்கு உரியவனாக்கிக் கொள்வதோ இயலாதாகிவிடும்! ஆகவே புனங்காவல் உரிமை பிறர் கைக்குப் போகாது, அது உன் கையிலேயே நிற்குமாறு ஓரிரு முறையேனும் எழுந்து போய் கிளிகளை ஓட்டு எனக் கூறினாள்.

தோழி கூறிய அனைத்தையும் கேட்டான் இளைஞன். நுண்ணிய அறிவுச் செல்வம் வாய்ந்தவன் அவன். அதனால், தோழி அவ்வாறு கூறியது, “ஏடா! எங்கள் தாய் தன் உடைமைகளிடத்தில் கருத்துடையவள். தன் உடைமை அழிந்துபோக அவள் பார்த்திராள்.

அதை அழியாதவாறு காப்பதற்கு வேண்டுவ அனைத்தையும் விரைந்து செய்து முடிப்பாள்; புனங் காக்கும் பொறுப் பேற்றுக் கொண்டவள் தன் மகளே ஆயினும், அவளால் அப்புனத்தை அழியாது காப்பது இயலாது என்பதை அறிந்து கொள்வாளாயின் அறிந்துகொண்ட அப்போதே, அவள் தன் மகள் என்பதையும் பாராது அவளை அகற்றி விட்டுப் பிறரை அமர்த்துவள்.

தினை முற்று முன்பே இத்துணை விழிப்பாயிருப்பவள், அது முற்றிவிட்டதைக் கண்ட பின்னர் எத்துணை விழிப்பா-