பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். கா. கோவிந்தனார்

87


“மெய்யில் தீரா மே வரு காமமொடு
எய்யாய் ஆயினம் உரைப்பல்: தோழி!
கொய்யா முன்னுகும் குரல் வார்பு தினையே
அருவி ஆன்ற பைங்கால் தோறும்

5. இருவி தோன்றின பலவே; நீயே
முருகு முரண் கொள்ளும் தேம்பளய் கண்ணிப்
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவன பெறலோடு அமைந்தனை: யாழநின்
பூக்கெழு தொடலை நுடங்க எழுந்து எழுந்து .

10. கிள்ளைத் தெள்விளி இடை இடை பயிற்றி
ஆங்காங்கு ஒழுகாயாயின், அன்னை
சிறுகிளி கடிதல் தேற்றாள் இவள் எனப்
பிறர்த் தந்து நிறுக்கு வளாயின்
உறற்கு அரிதாகும் அவன் மலர்ந்த மார்பே”

திணை : குறிஞ்சி

துறை : தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழி
தலைமகளுக்குச் சொல்லுவானாய் வரைவு கடாயது.

புலவர் : அறிவுடைநம்பி.

1. மெய்யில் தீரா: உடலுறு புணர்ச்சி பெறாத:
மேவரு-பெறுதற்கு அரிய:

2. எய்யாய் : அறியாய்;

3. வார்பு-முற்றி.

4. ஆன்ற : அற்றுப் போன; பைங்கால்-பசியதாள்.

5. இருலி-கதிர் இழந்த வெற்றுத்தாள்;

6. முருகு-மணம்: தேம்பாய்-தேன் சொட்டும்;
கண்ணி - தலைமாலை;