பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

என் தமிழ்ப்பணி



மேலை நாட்டு வளர்ச்சியெல்லாம் புறத் துறையிலேயே இருப்பதைக் காணலாம். சிகாகோ சென்று சர்வ சமய காங்கிரசிலே பேசிய சுவாமி விவேகானந்தரும் இதைத்தான் அங்கே சொன்னார். அகத்தை விட்டுப் புற வளர்ச்சியிலேயே மேற்கு நாடுகள் கரிசனை கொண்டுள்ளன என்று அவர் எடுத்துரைத்தார்.

தமிழன் அக வாழ்விலே சிறப்பு எய்துவதற்கு பழந்தமிழகம் அவனுக்கு வழி காட்டியிருச்கிறது.

யார் மனிதன்? எப்படி அவன் வாழ வேண்டும், என்றெல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவப் பெருந்தகை விளக்கியிருக்கிறார்.

“அரம் போலும் கூரியராயினும் மரம் போல்வர் மனிதப் பண்பிலார்” என்கிறார் வள்ளுவர். “மனித உறுப்புகள் இருக்கிற ஒரே காரணத்தாலோ, அல்லது சந்திர மண்டலத்துக்குப் போய் வரக்கூடிய அறிவு பெற்று விட்டதாலோ மனிதன் மனிதன் ஆதி விடமுடியாது. மனிதப் பண்பு இல்லாவிட்டால் அவன் மரத்துக்கு சமம். ஆவான்” என்பது வள்ளுவர் வாக்கு.

“எது மனிதப் பண்பு? தனக்கு என்று இல்லாமல் பிறருக்காக வாழத் துடிக்கும் பண்பே மனிதப் பண்பு. பிறருக்குத் துன்பம் வரும்போது அது தனக்கு வந்த துன்பமாகக் கருதி அதை நிவர்த்திக்க முயற்சி செய்யும் பண்பே மனிதப் பண்பு.

இந்தப் பண்பு உள்ளவர்களாகத் திகழ்ந்ததால்தான் காந்தியடிகள், அறிஞர் அண்ணா போன்றோரை இன்றும் போற்றுகிறோம். அவர்களைத் தெய்வமாக மதிக்கிறோம்.