பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

91


அண்ணா தெய்வம் ஆக்கப்பட்டதேன்?

அமெரிக்காவுக்கு சத்திர கிசிச்சைக்காகச் சென்று வந்த அறிஞர் அண்ணா நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால் அண்ணாவால் டாக்டர்களின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடக்க முடிய வில்லை.

எப்பொழுதும் போல் மக்கள் பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டார். சென்னை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. இந்தக் கட்டத்தில்

“தாம் பிறந்த தமிழ் நாட்டுக்கு “தமிழ்நாடு” என்று சட்ட ரீதியாகப் பெயர் வைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை புதுடெல்லி மத்திய அரசு ஏற்று அதற்கு வேண்டிய சட்டத் திருத்தங்களைச் செய்ததும், 1968ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று சென்னையிலே வெற்றி விழா கொண்டாட ஏற்பாடாகி இருந்தது.

அண்ணா அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டு பேச விரும்பினார். டாக்டர்கள் அவரை எச்சரிக்கை செய்தார்கள். இந்த நிலையில் நீங்கள் கூட்டத்தில் பேசுவது உங்களுக்குக் கூடாது என்று வழி மறித்துச் சொன்னார்கள்.

அந்த டாக்டர்களுக்கு அறிஞர் அண்ணா என்ன பதில் கூறினார் தெரியுமா? “தமிழ்நாட்டுக்கு “தமிழ்நாடு” என்று பெயர் வைத்து விட்ட வெற்றி விழாவிலே பேச முடியாது என்றால் என்னுடைய இந்த உடல் இருந்தென்ன, இல்லாமல் போனால் தான் என்ன? நான் கட்டாயம் பேசத்தான் போகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டார்.

கூட்டத்தில் அவர் பேசி விட்டுத் திரும்பவும் மருத்துவமனைக்குப் போக வேண்டியதாயிற்று. போனவர் திரும்பி