பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



14. அறா அலியரோ அவருடைக்
கேண்மை!

நெய்தல் நிலத்து நல்லோன் ஒருவனைக் கணவனாகப் பெற்றுக் களித்து வாழ்ந்திருந்தாள் ஒரு நங்கை. மனைவிபால் மாறாக் காதல் கொண்டிருந்த அவன் உள்ளத்தில் கடமையுணர்வும் இடம் பெற்றிருந்தது. அதனால் அவளை மணந்து மனையறம் மேற்கொண்ட சின்னாட்களுக்குள்ளாகவே, தங்கள் இல்லற வாழ்க்கைக்கு இனிய துணைபுரிவதாய பொருளீட்டி வரும் பணியில் சென்றது அவன் மனம், அது கிடைக்கும் கடல் கடந்த நாடுகளுக்கும் கலம் ஏறிச் சென்று விட்டான் அவன்.

பொருளின் இன்றியமையாமையை உணர்ந்த அவளும் அவன் போக்கிற்கு உடன் பட்டாள்; அவன் போய் விட்டான். வேண்டும் பொருளீட்டிக் கொண்டு விரைவில். வந்து விடுவேன் என்று கூறிச் சென்றவன் நாட்கள் பல ஆகியும் வந்திலன்: கடல் கடந்த நாடுகளுக்குச் சென்றவர் மீள்வதற்குரிய கீழ்க் காற்று வீசும் காலமும் தொடங்கி விட்டது. ஆயினும் அவன் வந்திலன்; காதலனைப் பிரிந்து தனித்துக் கிடந்து துயருறுவாள், அவன் வாராக் காலம் வளரவளர மேலும் மேலும் துயர் உற்றாள். அவள் உடல் நலனும் குன்றிற்று.

நாள் முழுதும், வீட்டினுள் அடைபட்டுக் கிடந்து வருந்துவாள், மனத்துயரம், மனைப்புறம் சென்று உலாவி,