பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

105



கால் நிமிடத்திற்குள் இது முடிந்து விடும். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட இந்த மாபெரும் பிரதிநிதிகளோ, இரண்டு நிமிட நேரம், இந்த அம்மாவின் செருப்புக் காலில் முகம் போட்டுக் கிடக்கிறார்கள். இந்த அம்மையாரோ, அது ஒரு பெரிய விவகாரம் இல்லை என்பது மாதிரி எங்கேயோ பார்த்துக் கொண்டு போக்குக் காட்டுகிறார். இந்த அவலமான கேவலத்தை இது வரை எந்த அமைப்பும் ஒரு இயக்கமாக எடுத்துக் கொண்டு, தமிழனின் தன்மானத்தை நிலை நிறுத்தப் போராடவில்லை. இந்த இலட்சணத்தில் 'தமிழன் உலகாண்டானாம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றினானாம். இனமானம் உள்ளவனாம்'.

சேடப்பட்டி முத்தையா, அவர்கள் மாண்பு மிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோதும், பேரவைக்குள்ளேயே நெடுஞ்சாண் கிடையாக ஜெயலலிதா காலில் விழுந்து, சட்டப் பேரவையின் கவுரவத்தை உலகறியச் செய்து விட்டார். இதற்குப் பின்னர், பேரவைக்குள் ஜெயலலிதா நுழையும் போதும், வெளியேறும் போதும், சிறிது ஆசுவாசமாக அருகே உள்ள ஓய்வு அறைக்குச் செல்லும் போதும், சட்டப் பேரவை அதிமுக உறுப்பினர்கள் எழுவதும், உட்காருவதுமாக இருப்பார்கள். சேடப்பட்டியார் கூட எழுந்து நிற்காதது போலவும், அதே சமயத்தில் உட்காராதது போலவும் திரிசங்கு ஆசனத்தில் நிற்பவர் போல் நிற்பார். 19ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் சமஸ்தான்த்தில் ஒரு அடிமையின் விலை இரண்டு எருதுகள் என்று பழைய வரலாறு கூறுகிறது. ஆனால், இங்கேயோ ஒரு அடிமையின் விலை ஒரு எம்.எல்.ஏ பதவி என்பது அதிமுக படைத்த புதிய வரலாறு.

முன்னதாக அதிமுக, காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் துவக்க விழா, சென்னை வானொலி நிலையத்திற்கு எதிரே உள்ள கடற்கரைப் பரப்பில் நடை பெற்றது. ராஜீவ் காந்தியும், ஜெயலலிதாவும் பங்கேற்றார்கள். அப்போது, ஜெயலலிதா, பேரவைக்குக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டட வேட்பாளர்களை மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்தார். மக்களுக்கோ, அந்த உறுப்பினர்களின் முகங்கள் தெரியவில்லை. அத்தனை பேரும் தொப்பென்று அந்த அம்மா காலில் குப்புற விழுந்ததால், அவர்கள் முதுகுகள் மட்டுமே மக்களுக்குத் தெரிந்தன. செய்தியாளன் என்ற முறையில் முன் வரிசையில்