பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

என் பார்வையில் கலைஞர்



இருந்த நான், ராஜீவ் காந்தி தம்மோடு நின்ற இன்னொரு வடநாட்டு காங்கிரஸ் தலைவரைப் பார்த்து, கண்ணடித்துச் சிரிப்பதைப் பார்த்து விட்டு, தமிழன் இப்படி ஆனதற்காகத் துக்கக் கூத்து ஆடாத குறையாக, வெம்பி வெம்பிப் பார்த்தேன்.

எந்தக் காலத்திலேயும் இல்லாத அளவுக்கு, தமிழனை அடிமைப்படுத்தும் இந்தக் காலடிக் கலாச்சாரம் முதலமைச்சர் ஜெயலலிதா மீது எனக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது என்றாலும், முதலமைச்சர் என்ற முறையில் அவருக்கு உரிய செய்திகளைத் தாராளமாகவே வெளியிட்டேன். அதே சமயம், எதிர்க்கட்சிச் செய்திகளை, குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டேன். தேர்தலுக்கு முன்பு, செல்வி ஜெயலலிதா விடுதலைப் புலிகளால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக, திமுக.வைச் சம்பந்தப்படுத்திக் குற்றம் சாட்டினார்.

என்றாலும், அவர் பதவியேற்ற ஒரு மாத காலத்தில், அவருக்கு நெருக்கமானவர் ஒருவரும், இப்போது மாற்று அணியில் இருக்கும் அப்போதைய ஒரு மூத்த அமைச்சரும், 'முதலமைச்சர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருக்கிறது மாதிரி, நீங்க அடிக்கடி செய்தி போடுறீங்க இதனால், அம்மா மேல விடுதலைப் புலிகள் ஒரு கண்ணா இருக்காங்க. விடுதலைப் புலிகளால் யாரையும் எங்கே வைத்தும் கொல்ல முடியும். அதனால் இனிமேல், அந்த மாதிரிச் செய்திகளைப் போடாதீர்கள்' என்று எனக்கு ஒரு செய்தி வந்தது. அப்படிக் கூறியவர்களின் பெயர்கள் இன்றும் எனக்கு நினைவில் உள்ளன. முதலைமைச்சருக்கு வேண்டிய இன்னொரு அரசு சார்பிலா அமைச்சர் ஒருவர் ‘இன்றைக்குக் கூட அம்மா வீட்ல, எல்டிடி திரட் வந்தது. அதனால இனிமேல் அவங்க விடுதலைப் புலிகளுக்கு எதிரானவங்க என்கிற மாதிரி செய்தி போடாதீங்க’ என்று உரிமையோடு என்னைக் கேட்டுக் கொண்டார்.

நானும் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சம்பந்தப்படுத்தி, விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட செய்திகளைப் போடவில்லை. முதலைமைச்சர் அப்படிப் பேசினால்தானே நான் போடுவதற்கு? விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கப்சிப் ஆகிவிட்டார். இப்படி அகத்தே பயந்து, புறத்தே பேசிய வீரத்தைக் கூட விடுதலைப் புலிகள் விவகாரத்தில் விட்டுக் கொடுத்தார். சட்டப் பேரவையிலோ ஜெயலலிதா மாபெரும் வீராங்கனையாக