பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

என் பார்வையில் கலைஞர்



அமைக்கப்பட்ட ஒரு கூண்டில் அவர் நிறுத்தப்பட்டு, பேரவைத் தலைவர் வாசித்த கண்டனத்தை அமைதியோடு வாங்கிக் கொண்டார். பேரவை உறுப்பினர்களும், அப்போது கட்சி வேறுபாடின்றி அமைதியாக இருந்தார்கள். அதிமுக உறுப்பினர்கள் இப்படி ஒரு விதி விலக்காக நடந்து கொண்டதை நினைக்கும் போது, இப்போதும் எனக்கு அவர்களைப் பாராட்டத் தோன்றுகிறது.

சட்டப் பேரவையில் இன்னொரு காட்டுமிராண்டித் தனமான உரையை அப்போதைய அதிமுக உறுப்பினர் ஒருவர் நிகழ்த்தினார். கலைஞரின் மகள் கனிமொழியை, சிலேடையில் மிகவும் இழிவாகப் பேசினார். ஒரு பெண், என்பதையாவது அவர் மனதில் நினைத்து இருக்க வேண்டும். அல்லது ஒரு முன்னாள் முதல்வரின் மகள் என்பதையாவது நினைத்திருக்க வேண்டும். இவற்றை நினைவில் கொள்ளாமல், கனிமொழியை இழிவு படுத்தி மாறி மாறிப் பேசினார். முதலமைச்சர் ஜெயலலிதாவும் பேரவையில் இருந்தார். அந்த அராஜகப் பேச்சைத் தடுப்பதற்குப் பதிலாக, இரசிப்பது போலவே தோன்றியது.

செய்தியாளர் மாடத்தில் இருந்த நான். சட்டப் பேரவைக்குள் அருகே இருந்த சென்னை புரசைவாக்கம் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ரங்கநாதன் அவர்களிடம், மெல்லிய குரலில் அந்த உறுப்பினர் அடாவடியாகப் பேசுவதை எதிர்க்கும்படிக் குறிப்பிட்டேன். அவரும், ஒரு சில காங்கிரஸ் உறுப்பினர்களோடு சேர்ந்து, எதிர்ப்புக் குரலிட்ட போது, அந்த உறுப்பினர் பேச்சை வேறு பக்கம் திருப்பி விட்டார். இந்தக் காட்டு மிராண்டி பேச்சை என்னால் பொறுக்க முடியவில்லை. சென்னை வானொலி நிலையச் செய்தியில் ஒரு முன்னாள் முதல்வரின் மகள் இழிவு செய்யப்பட்டார் என்றும், இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தார்கள் என்றும் குறிப்பிட்டேன். சட்டப் பேரவை நடைபெறும் சமயத்தில், பேரவை விமர்சனம் என்று பத்து நிமிடத்திற்கு ஒலி பரப்புவோம். இதில், அந்த உறுப்பினரின் பேச்சு காட்டுமிராண்டித் தனமானது என்று வர்ணித்தோம்.

இரவு வீட்டிற்குத் திரும்பியபோது, ஒரு தந்தை என்ற முறையில், கலைஞரின் மனம் என்ன பாடுபடும் என்பது எனக்குப் புரிந்து விட்டது. கூடவே, ஒரு பாவமும் அறியாத கனிமொழி, அவரது அன்னையார் ஆகியோர் எப்படித் துடித்து இருப்பார்கள்