பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

113



தோன்றும் அந்த வரிகள் ஓசைப் படாமல் எடுக்கப்பட்டு இருக்காது. இதில் ஒரு வேதனை என்னவென்றால், எந்தப் பத்திரிகையும் இதைக் கண்டித்து ஒரு வரி கூட எழுதவில்லை. அந்த உறுப்பினர் பேசியதை இருட்டடிப்புச் செய்து கலைஞருக்கு ஏதோ சலுகை செய்து விட்டது மாதிரி அனுமானித்துக் கொண்டன.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை, தர்ம சங்கடத்தில் வைக்கும் பல சிக்கலான பிரச்னைகளும் உருவாயின. அவற்றைப் பெரும்பாலும் அரசு ஊழியனாக அனுமானிக்கப்படும் நானே எழுப்புவேன். எடுத்துக்காட்டாக, அகில இந்திய சட்டப் பேரவைத் தலைவர்கள் மாநாடு அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் பல்ராம் ஜாக்கர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. மத்தியான உணவிற்குச் செய்தியாளர்கள் அழைக்கப் பட்டு இருந்தார்கள். தீவுத் திடலில் இந்தப் பகலுணவு நடைபெற்றது. பொதுவாக இந்த மாதிரி சமயங்களில்தான், செய்தியாளர்கள், பிற மாநிலப் பேரவைத் தலைவர்களோடு உரையாட முடியும்.

இப்படி உரையாடக் கூடாது என்று நினைத்தோ என்னவோ, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பேரவை உறுப்பினர்கள், பிற மாநில, சட்டப் பேரவைத் தலைவர்கள் ஆகியோருக்குத் தனியாக ஒரு ஷாமியானா பந்தலும், செய்தியாளர்களுக்கு என்று இன்னொரு பந்தலும், தனித்தனியாகப் போடப் பட்டிருந்தன. நான் சக செய்தியாளர்களிடம் இதைச் சுட்டிக் காட்டி, விருந்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று வாதிட்டேன். அவர்களோ, பத்திரிகைத் தொழிலில் இது எல்லாம் சகஜம் என்று வாதிட்டார்கள். போதாக் குறைக்கு, பத்திரிகை முதலாளிகளுக்குப் பதில் சொல்ல வேண்டியர்கள் அவர்கள். நானும், முதலாளிகளுக்கு முதலாளியான மத்தியத் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவன். கூடவே, பசி வேறு. இட ஒதுக்கீடாக இருந்த கொட்டகைக்குள்ளேயே பகலுணவை அருந்தி விட்டோம்.

ஆனாலும், மாலையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பல்ராம் ஜாக்கர், பேரவைத் தலைவர்கள் மேற் கொண்ட முடிவுகளை விளக்கினார். எடுத்த எடுப்பிலேயே, நான் இடை மறித்து, செய்தியாளர்கள் நடத்தப்பட்ட விதத்தை விளக்கி, அதை ஆட்சேபிக்கிறோம் என்று குறிப்பிட்டேன்.

எ . 8