பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

என் பார்வையில் கலைஞர்எனது மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்கு முன்பு, யானைப் பூச்சிகள் என்ற தலைப்பில் வெளியான எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றை அவரிடம் கொடுத்தேன். குறிப்பாக யானைப் பூச்சிகள் என்ற சிறுகதையை அவர் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

இந்தக் கதை செம்மலரில் வெளியானது. தற்செயலாக தேனீக்களின் திவ்ய சரித்திரம் என்ற ஒரு நூல் எனக்குக் கிடைத்தது. இது 1932ம் ஆண்டில் பூச்சி சாஸ்திரி வெங்கட்ராமய்யர் என்பவரால் கோவையில் வெளியிடப்பட்ட நூல். இந்தப் புத்தகத்தில் தேனீக்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன. ஒரு தேன் கூட்டில் பொதுவாக ஒரு ராணித் தேனீதான் இருக்கும் என்றும், ஆனால், அபூர்வமாக இரண்டு ராணித் தேனீக்கள், ஓரே கூட்டில் இருந்து தத்தம் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் என்றும் அவர் எழுதியிருந்தார்.

ஒற்றை அடை மட்டுமே கட்டும் சாமானியத் தேனீ ஒருவகை. இது தேனடைகளை, சொந்த மெழுகால் கட்டாமல் மண்ணையும், மரப் பிசின்களையும் சேர்த்துக் கட்டுமாம். இந்திரா காந்தியுடன் ஆரம்பத்தில் அரசியல் விளைவுகளைப் புறந் தள்ளிக் கூட்டணி வைத்த கலைஞர், எனக்கு சாமானீயத் தேனீயாகத் தோன்றினார். ஒரு காலத்தில் மலைத் தேனீயாக இருந்து, பின்னர் சமதளத்திற்கு வந்து, பயந்தாங் கொள்ளியாய்ப் போன டாமர் தேனீ வகை ஒன்றையும், பூச்சி சாஸ்திரி குறிப்பிடுவார். இது எனக்கு வீரமணி அவர்களின் திராவிடர் கழகமாகப் பட்டது. இரண்டு ராணித் தேனீக்களை நினைத்ததும், எனக்கு ஜெயலலிதா, சசிகலா நினைவு வந்ததைச் சொல்ல வேண்டியது இல்லை.

இந்த ராணித் தேனீக்கள் தமிழக நந்தவனத்தை அளவுக்கு மீறித் தேன் உறிஞ்சி எப்படிக் கெடுக்கின்றன என்பதும், சாமானியத் தேனீ, இதை எதிர்த்துப் பெரிதாகப் போராடாததையும், தமிழக நந்தவனம் அநாதையாகி விட்டதாகவும் சித்தரிக்கும் கதை அது. கலைஞர் இந்தத் தொகுப்பின் அட்டைப் படத்தை, ரசித்துப் பார்த்தார்.

எங்கள் உரையாடல். அரசியல் பக்கமாகச் சென்றது. சில அந்தரங்கமான விவகாரங்களைப் பேசினோம். அவற்றை இங்கே குறிப்பிடுவது நாகரீகமாகாது. ஆனாலும், கலைஞர் ஒரு கட்டத்தில் ‘சமுத்திரம்! நாங்க ஆளும் போது சர்க்காரியா கமிஷனில் எங்கள்