பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XI


இருக்கலாம். அதாவது இவரது பிணத்தை பிரேத பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து எடுப்பதற்குக் கூட அன்பளிப்புக் கொடுக்க வேண்டுமென்பது சமூகச் சிலுவையைச் சுமந்த பழனிசாமிக்கு தெரியவே தெரியாது.”

இது நடந்த கதை. இனி நடக்கக் கூடாதென்பதற்காக எழுதப்பட்ட கதை. நடக்காது என்ற உறுதியை நான் சமுத்திரம் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். (பலத்த கைத்தட்டல்)

நான் முதலிலே குறிப்பிட்டேன். என் மீது அளவு கடந்த பிரியம் ஒன்றும் சமுத்திரத்திற்கு இல்லை. ஆனால் அந்தப் பிரியம் கொள்ளும்படியாக நான் அவரிடத்திலே நடந்து கொண்டிருக்கிறேன் என்பது இன்று அவர் ஆற்றிய உரையின் மூலம் எனக்குப் புரிகிறது. அவருடைய எழுத்துக்கள், சமுதாயத்திலே உள்ள சில கேடுகளை, குழப்பங்களை, புண்களை போக்குவதற்கு என்றைக்கும் ஆயுதமாகப் பயன்படக் கூடிய எழுத்து.

ஆனால் சமுதாயத்தில் இருக்கின்ற இந்த விவகாரங்கள் மாத்திரமல்ல. ஒரு ஆட்சியினால் சுட சமுதாய-கலாச்சாரக்கேடு விளையும் என்பதை அவர் புரிந்து கொட் காரணத்தினாலே தான் அவர் ‘ஒரு மாமரமும்மரங்கொத்தி பறவைகளும்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

அண்ணா அவர்கள் இப்படி உருவகப்படுத்தி கதைகள் எழுதியதுண்டு. நானும் இப்படி உருவகப்படுத்தி எழுதிய கதைகள் பல உண்டு. ஆனால் இவரைப் போல பயமில்லாமல் இவ்வளவு பச்சையாக உருவகப்படுத்தி இந்தக் கதைகளை நாங்கள் கூட எழுதவில்லை. அந்தத் துணிச்சலை பாராட்டுகிறேன். அந்தத் துணிச்சல் எப்படி வந்தது என்று பார்க்கிறேன்.

பெயர் சமுத்திரம். சமுத்திரத்தின் தண்ணீர் உப்பு கரிக்கும். ஆனால் சூரிய ஒளி பட்டால் அந்தத் தண்ணீர் நீராவியாகி மழையாகப் பொழியும். மழையாகப் பொழியும் போது தூய தண்ணீராக இருக்கும். உப்பு கரிக்காது. சூரிய ஒளி பட்டதால் சமுத்திர நீர் நல்ல நீராகிறது. (பலத்த கைதட்டல்) வாழ்க சமுத்திரத்தின் புகழ் என்று வாழ்த்துகிறேன்.