பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

என் பார்வையில் கலைஞர்



ஒளவையும், நானும் ஆற்றிய உரைகளாலும், முகத்தாட்சண்யம் கருதியும் சிவந்தி ஆதித்தன் அவர்கள் மீது ஏற்பட்ட பழைய பாசம் புதுப்பிக்கப்பட்டதாலும், கலைஞர் கலகலப்பாகி விட்டார். இதை மைக்கில் பேசிக்கொண்டிருந்த நான் புரிந்து கொண்டேன். உடனே, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கலைஞர் அவர்களையும், சிவந்தி ஆதித்தன் அவர்களையும் இந்த மேடையில் ஒன்றாகப் பார்க்கிறோம். இனிமேல் ஒன்றாக்கிப் பார்க்க வேண்டும் என்று அவர்களுக்குள் ஐந்தாண்டு காலமாக நிலவிய இடைவெளியை இட்டு நிரப்புவது போல் பேசினேன். கலைஞருக்கு தினத்தந்தியும் குறிப்பாக சிவந்தியும், சிவந்திக்கு தமிழக அரசும் குறிப்பாக கலைஞரும் தேவைப்படுகிறதோ இல்லையோ, தமிழகத்திற்கு இது தேவைப்படுகிறது என்பதை நான் சூசகமாக குறிப்பிட்டதை புரிந்து கொண்ட கூட்டத்தினர் அதை ஆமோதிப்பதுப் போல் பலத்து ஆரவாரித்தனர்.

கலைஞர் பேச எழுந்தார். பேச்சாளர்கள் அத்தனை பேருக்கும் கிடைத்த கைத்தட்டல்களை கூட்டி போட்டால் அதைவிட அதிகமான கைதட்டல்கள். குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்குமோ கேட்காதோ, ஒரு சிறு தக்கை விழுந்தால் சத்தம் கேட்டிருக்கும் அப்படிப்பட்ட மெளன எதிர்பார்ப்பு. கலைஞர், ஒளவை நடராசன் அவர்கள் படித்த தனது கவிதையை மீண்டும் படித்தார். அந்தக் கவிதையை பத்து நிமிடம் வரை அப்படியே ஒப்பித்தார்.

போரில் புறமுதுகு காட்டி மாய்ந்ததாக ஒருவனால் புரளிகிளப்பி விடப்பட்ட மகனது சடலத்தைப் பார்க்கும் ஒரு போராளித் தாயின் கதை. மகன் மார்பில் வேல் ஏந்தி இறந்ததைக் கண்டு பொய்ச் சொன்ன கயவனின் நாக்கெங்கே என்று முலைப்பால் அறுக்கப் போன அந்த வீரக் கிழவி அந்தப் பொய்யனைத் தேடுகிறாள். கூட்டம் அசந்து விட்டது. எப்போதோ எழுதிய அந்த கவிதையை கலைஞர் காற்புள்ளி, அரைப்புள்ளி கூட பிசகாமல் தாள நயத்தோடு ஒப்பித்ததை கண்டு கூட்டம் அதிசயத்து விட்டது. தோள் கண்டார் தோளே கண்டார் என்பது போல் கலைஞர் முகத்யுைம் பார்க்க மறந்து அவர் வாயிலிருந்து ஒலிக்கும் வார்த்தைகளை மட்டுமே உள்வாங்கியது. ஆனாலும் கலைஞர் ஒரு போடு போட்டார். கடைசிவரி ‘வாளிங்கே! அவன் நாக்கெங்கே? என்று வரவேண்டும், ஆனால் ஒளவையோ ‘அவன் நாக்கிங்கே