பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

என் பார்வையில் கலைஞர்



தாபங்களும், கலைஞரின் காதுகளுக்கு எட்டியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும், குழு உறுப்பினர்கள் என்னிடம் அன்போடும், பண்போடும் நடந்து கொண்டார்கள். ‘குழுவுக்கு ‘உங்கள மாதிரி ஒரு ஆள் தேவைதான்’ என்றும் சொல்லிக் கொண்டார்கள்’ எப்படியோ புதிய குழுவில் நான் இடம் பெறாமல் போனதற்கு நானே காரணம். அதற்காக எந்த வருத்தமோ அல்லது குற்ற உணர்வோ ஏற்படவில்லை. கலைஞரின் நம்பிக்கையை தகர்த்து விட்டேனே என்கிற ஆதங்கம்தான். அதே சமயத்தில் எனக்கு நானே உண்மையாக இருந்தேன் என்ற தெளிவு. கூடவே, எனது கருத்துக்களை இதமாக சொல்லி இருக்கலாமே என்கிற ஒரு பின் யோசனை.

என்றாலும், தமிழக அரசின் திரைப்படத் தேர்வில் கலைப்படங்கள் தேர்வதில்லை. சும்மாயிருப்பதே நடிப்பு என்பது மாதிரியான கலைபடங்கள் தான் வந்து கொண்டும் இருக்கின்றன. இந்தத் தேர்வில் திரைப்படங்களின் அடிப்படைக் கருத்துகளைப் பற்றியோ சமூக விரோத உரையாடல்கள் பற்றியா, உறுப்பினர்கள் அலட்டிக் கொள்வதில்லை. திரைப்படத் தணிக்கை குழுவை தலையணையாக வைத்துக் கொண்டு படங்களைப் பார்க்கிறார்கள். ஆகையால், இந்தக் குழு இப்படியே இருக்கட்டும் இன்னும் சில சமூகச் சிந்தனையாளர்களை குழுவில் சேர்த்துக் கொள்ளலாம்.

என்னைக் கேட்டால், ஒரு திரைப்படத்தின் கதைக்கரு, அடிப்படையில் மோசமாக இருந்தால் அது எவ்வளவு சிறப்பாக எடுக்கப்பட்டாலும், அதற்கு அரசு பரிசுகள் வழங்கப்படலாகது என்பேன்.