பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XIII


விட என்னைப் பற்றி கலைஞர் வழியாக தெரிவித்துக் கொள்ளும் நூல் என்று கூடச் சொல்லலாம். இந்த நூலில் நான் தான் தூக்கலாக பேசியிருக்கிறேன். கலைஞர் அப்படி பேசவில்லையா என்ற ஒரு கேள்வி எழும்... பேசினார். ஆனாலும், அந்த மகத்தான் தலைவர் தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்த அனைத்து கருத்துக்களையும் வெளிப்படுத்த எனக்கு உரிமை இல்லை .

கலைஞரைப் பற்றி எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது?

ஆய்வுத் தகுதி இல்லை. அதிகமான இலக்கியத் தகுதியும் இல்லை. இணையான அந்தஸ்து தகுதியும் இல்லை. காலங்காலமான நட்புத் தகுதியும் இல்லை. அவரது சுகதுக்கங்களில் பங்கு கொண்ட பாசத்தகுதியும் இல்லை. ஆனாலும்-

ஒரு நேர்மையான அதுவும் தன்னலமறுப்பு இலக்கியவாதி - தமிழ்ச் சாதியான் என்ற ஒரே ஒரு தகுதி என்னிடம் நிச்சயம் இருக்கிறது. இந்தத் தகுதியைத்தான் இங்கே வாசகர்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். நூற்றுக்கு நூறான தகுதி என்று நானே சொல்லமாட்டேன். அதே சமயம் எனக்கு நானே எண்பது விழுக்காடுகள் கொடுத்துக் கொள்ளலாம்.

திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்து மாணவர்களையும் தன்பக்கம் இழுத்துக் கொண்டபோது நான் சிறுபான்மை தேசியவாதியாகவே பொதுவாழ்க்கையைத் துவக்கினேன். இதனால் திமுக மயமான மாணவர்கள் மத்தியிலே எனக்கு கிடைக்க வேண்டிய செல்வாக்கை இழந்தேன். ஆனாலும் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

சமூகநீதி என்று வந்துவிட்டால் நான் எனக்கு வேண்டியவர்களையும் பகைத்துக் கொள்ள தயங்கியது இல்லை. எடுத்துக் காட்டாக, நான் பிறந்த போது எனக்கு பெயர் வைத்தவர் எங்கள் ஊர் கணக்கப்பிள்ளை. ஆனாலும், அவரது கூட்டுறவுச் சங்க ஊழல்களைப் பற்றி, 15வயதிலேயே ஊரில் கூட்டம் போட்டு கண்டித்திருக்கிறேன்.

முப்பத்திரண்டு ஆண்டுகால மத்திய அரசு அலுவலக வாழ்க்கையில் அரசுக்கெதிராக மூன்று தடவை நீதிமன்றங்களுக்குச் சென்றிருக்கிறேன். பல்வேறு உயர் அதிகாரிகளுக்கு எதிராக போர்க்கொடித் தூக்கி அத்தனையிலும் வெற்றி பெற்றிருக்கிறேன். ஆனாலும், அவை தந்த விழுப்புண்கள் இன்னும் வலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

புதுடில்லியில், தூசிபடிந்த கண்ணாடியாக இருந்த நான், எனது போராளிக் கைகளாலேயே, என்னை, நானே துடைத்துக் கொண்டு, எங்கள்