பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

155



வாயைத் திறக்கவில்லை. என்னையடுத்து பேசிய பெருஞ்சித்தனார் மகள் மட்டும் தான் கலைஞர் வராததை கண்டித்தார். கலைஞர் வந்திருந்தால் இந்தப் போராளித் தமிழர்கள் மத்தியில் அவருக்கு ஒரு நல்ல பெயர் கிடைத்திருக்குமே என்று நினைத்தேன். ஆனாலும், அனுதாபக் கூட்டம் விடுதலை புலிகளின் ஆதரவு கூட்டம் போல்தான் நடைபெற்றது. இதை மனதில் வைத்துதான் கலைஞர் வரவில்லையோ என்னமோ. அதோடு, சாலையாரும் தன் மீது போட்ட வழக்குகளை விலக்கிக் கொண்ட கலைஞரை ஒரு எட்டு அவர் வீட்டிற்கு நடந்து நன்றி சொல்லியிருக்கலாம் என்றும் தோன்றியது. ஆனாலும், கலைஞர் வந்திருக்க வேண்டும் என்பதே இப்போதும் என் கருத்து.

மூன்றாவதாக முரசொலி மாறன் அவர்களுக்கும், எனக்கும் கலைஞர் இல்லத்திலேயே ஒரு மோதல் ஏற்பட்டது. ஏற்கெனவே குறிப்பிட்ட இலா பத்திரிகை சார்பில் கலைஞரிடம் ஒரு நேர்காணல் வாங்க வேண்டும் என்று அதன் ஆசிரியர் சின்னப்ப பாரதி என்னிடம் தெரிவித்தார். நான் சண்முகநாதன் அவர்களிடம் தொடர்பு கொண்டு, கலைஞரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்ட போது அவர் முதலில் கேள்விகளை நான் எழுதி கொடுத்துவிடலாம் என்றும், பிறகு கலைஞர் பதிலளித்ததும் அவரை நேரில் சந்தித்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இது நல்ல ஏற்பாடாகவே எனக்குத் தோன்றியது.

1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி, கேள்விப் பட்டியலோடு கோபாலபுரம் சென்று சண்முகநாதனிடம் அந்த பட்டியலை ஒப்படைத்து விட்டு திரும்பி நடந்த போது, வரவேற்பரையின் வலது பக்கம் முரசொலி மாறன் ஒரு நோட்டில் குனிந்தபடியே எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமியும், துரைமுருகனும் நின்று கொண்டிருந்தார்கள். அன்று கணினி தமிழ் தட்டெழுத்து முறைமைகளை உலகளவில் ஒருமைப்படுத்தும் கருத்தரங்கில் கலைஞர் பேசுவதால் பார்வையாளர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

ஆர்க்காடு வீராசாமி அவர்கள் எனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர். எனது பாலைப்புறா நாவலை வெளியிட்டவர். பொதுவாக பேசமாட்டார். ஆனால், நண்பரை அங்கீகரிப்பது போல் ஒரு சிரிப்புச் சிரிப்பார். நான் வணக்கம் போட்ட போது