பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

157



அன்போடு கூறியவர். அப்படிப்பட்ட மாறன் என்னை பாராமுகமாக பார்த்தபோது, எனக்கு வருத்தம் ஏற்பட்டது. அந்த வருத்தத்தை வெளிக்காட்டுவது என்று தீர்மானித்தேன். இப்படியாக எங்கள் உரையாடல் இருந்தது.

‘என்ன மாறன் சார்!... நாம நீண்டகால நண்பர்கள் ஐந்தாண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறோம். உங்களுக்கு கும்பிடு போடுறேன் ஒப்புக்குக் கூட நீங்க. பதில் வணக்கம் போடலியே?’

‘நீங்க முரசொலி படிக்கிறதே பாவமுன்னு சொல்றீங்க. உங்க கிட்ட நான் எதுக்கு பேசணும்?’

‘நான் எப்ப சார் பேசினேன்? நான் அப்படியெல்லாம் விமர்சிக்கலியே. நான் முரசொலிய படித்தால் தான்ே விமர்சிக்கிற பிரச்சனை வரும்.’

‘இல்ல. நீங்க பேசியிருக்கிங்க. என்கிட்ட பேப்பர் கட்டிங் இருக்கு.’

‘எந்த பேப்பர் சார்.’

‘எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா, பேசியிருக்கிங்க.’

மாறன், மேற்கொண்டு, என்னிடம் பேச விரும்பாதது போல் மீண்டும் எழுதத் துவங்கினார். ஒருவேளை கலைஞருக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள உறவு மாற்றமோ அந்தரங்கமான தொலைபேசி உரையாடல்களோ அவருக்கு தெரியாமல் கலைஞரை நான் அண்டிப் பிழைக்க வந்ததாக நினைத்து இருக்கலாம். எனக்கு ஆத்திரம் வந்தது. இப்படிக் கத்தினேன்.

‘லுக் மிஸ்டர் மாறன்!, நல்லா கேளுங்க சார்.. உங்ககிட்ட எப்பவுமே நான் உதவிக்கு வந்தது இல்ல. இனிமேலும் வரமாட்டேன். ஆனால், அரைகுறை உண்மை பாதிக்கிணறு தாண்டுவது மாதிரி என்பதை மட்டும் புரிஞ்சுக்கங்க. நம்ம ஆட்கள் கிட்ட உள்ள கோளாறே தீர விசாரிக்காம ஒரு முடிவுக்கு வாரதுதான்’

ஆர்க்காட்டாரும், துரைமுருகனும் அதிர்ந்து போய் என்னையும், மாறனையும் மாறிமாறிப் பார்த்தார்கள். மாறன் நான் பேசுவதை கேட்டுவிட்டு பிறகு எழுதத் துவங்கினார். எனக்கு, பதிலாக ஒரு மென்சொல்லோ, அல்லது சுடுசொல்லோ