பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

161



விவரத்தை சண்முகநாதன் தனக்கு தெரிவித்து இருப்பதை குறிப்பால் உணர்த்தியபடியே ‘உங்களுக்கே தெரியும் எனக்கு ஓய்வில்லாத வேலை... என்னால இயலாதே சமுத்திரம்’ என்றார். உடனே, நான் ‘சார் உங்கள் நான் எனக்காக எப்பவும் எதுக்காகவும் வற்புறுத்தல.. என்ற பீடிகையோடு மேற்கொண்டு பேசப்போனேன். உடனே கலைஞர் இடைமறித்து அதனாலதான் நான் சொல்றேன். இப்பவும் வற்புறுத்தாதீங்க..’ என்றார்.

நான் இந்த பேரவையை அவர் நிச்சயம் துவக்கி வைத்தே ஆக வேண்டும் என்று ஒரு குழந்தையின் விடாபிடித்தனத்தோடு முரண்டு பிடித்தேன். கலைஞரும் மசிந்து விட்டார். தென் மாவட்டங்களில் தனது சுற்றுப் பயணம் முடிந்த பிறகு சண்முகநாதனை அணுகும்படி என்னிடம் தெரிவித்தார். வெளியே தலைவர்கள் தொண்டர்கள் என்று பலர் காத்திருந்ததால் நான் கலைஞருக்கு ஒரு பெரிய கும்பிடாக போட்டுவிட்டு வெளியேறினேன்.

கலைஞரின் தென்மாவட்ட சுற்றுப்பயணம் முடிந்ததும் சண்முகநாதன் மூலமாக கலைஞரை சந்திப்பதற்கு நேரம் வாங்கிக் கொண்டேன். கலைஞரை மாடியில் சந்தித்தேன். கலைஞர் வழக்கம் போல் தெம்பாகத் தான் இருந்தார். ஆனாலும், அவர் தோரணை உள்முகமாகவே இருந்தது. என்னை அன்புடன் வரவேற்றார். சன் தொலைக்காட்சியில் வீரபாண்டியன் நடத்திய நேர்காணலில், பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி அவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்தவன் நான். பாரதீய ஜனதாவுடன் அவர் மேற்கொண்டிருக்கும் புதிய கூட்டணி எனக்கு பிடிக்காது என்று அவர் நினைத்திருக்கலாம். கூடவே, கலைஞர் சேராத இடத்தில் சேர்ந்து விட்டார் என்று தமிழறிஞர்கள் ஒட்டுமொத்தமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். ஜெயலலிதா, இந்த பிஜேபி அணியோடு சேர்ந்து இருந்தபோது ஒப்புக்குக் கூட விமர்சிக்காமல் வாய் மூடிக் கிடந்த வீரமணி அவர்களுக்கும் இந்த புதிய உறவு அவலாகிவிட்டது. நான் எடுத்த எடுப்பிலேயே இந்த விதமாக பேசினேன் என்று நினைக்கிறேன்.

‘சார்..! நீங்க பிஜேபியோட உறவு வைத்திருப்பது ஒரு அரசியல் நடவடிக்கைதான். சமூக நடவடிக்கை இல்லை என்பது என்னை மாதிரி உள்ளவர்களுக்கு தெரியும். இதன் மூலம்,