பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

என் பார்வையில் கலைஞர்


தமிழகத்திலாவது மதவாதம் பரவாமல் நீங்கள் தடுக்க முடியும் . என்று நினைக்கிறோம். தம்பி ஸ்டாலின் சிறையில் கொடுமைப் படுத்தப் பட்ட போது கூட விருப்பு வெறுப்புகளை மீறி கட்சி நலனுக்காகவும், மக்கள் நலனுக்காவும் இந்திரா காந்தியுடன் கூட்டணி வைத்துக் கொண்டவர் நீங்கள். ஆகையால், இந்த கூட்டணி ஒரு பெரிய விவகாரமாகாது. நீங்களும் ஏதாவது ஒரு தேசிய கட்சியை சார்ந்திருக்க வேண்டும் என்பது அரசியல் நோக்கர்களுக்கு புரியும்.’

கலைஞரின் புதிய கூட்டணியை கண்டு பலர் அதிர்ந்து போயிருக்கிறார்கள். கலைஞர் மீது மெய்யான அன்பு வைத்திருப்பவர்களுக்கும் இது அதிர்ச்சி தான். தத்துவார்த்தக் கட்சிகளும், மேற்கு வங்க ஜோதிபாசு போர் குரல் கொடுக்க வில்லையா என்று மேடைகளில் வினவுகிறார்கள். ஆனால், மேற்கு வங்கத்தில் மித்ர பேதம் கிடையாது. ஜோதிபாசு நீக்கப்பட்டால் அவர் முன்னிலும் வலுவாக வருவார். ஆனால், தமிழகத்தின் நிலைமை வேறு.

திமுகவிற்கு அடுத்த பெரிய கட்சி மண்வாசனை இல்லாத தலைமையில் சிக்கியிருக்கிறது. இந்த தலைமை எந்த பழிபாவத்திற்கும் அஞ்சாதது. இதனை அதன் போக்கில் விட்டால், தமிழனும் கவலைப்பட மாட்டான். அந்த அளவிற்கு மனோ நோயாளியாகிப் போனவன் தமிழன். ஒருவேளை கலைஞர் மாற்று அணியில் சேர்ந்து, இதனால் சொந்த முறையிலும், அரசு முறையிலும் பாதிக்கப் பட்டால் இதே தமிழன் கலைஞருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று சொல்வான். இவனை நம்பி களத்தில் இறங்க முடியாது. ஆகையால், கலைஞர் எடுத்த முடிவு எனக்கு சரியாகவே பட்டது. எந்த அரசியல் தலைவரும், பிறா் பாராட்ட வேண்டும் என்பதற்காக தற்கொலை முடிவு எடுக்க முடியாது.

கலைஞரின் முகத்தில் ஒரு நன்றி மகிழ்ச்சி ஏற்பட்டதுபோல் எனக்குத் தோன்றியது. அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டேன். இப்படி நினைக்கும் உரிமை நான் எவ்வளவு சிறியவனாக இருந்தாலும் எனக்கு அது உண்டு என்று நம்புகிறேன். கலைஞரும் மனம் திறந்து என்னிடம் பல்வேறு விவகாரங்களை எடுத்துரைத்தார். இவற்றில் ஒரு சில அந்தரங்கமானவை. அவரது சகாக்களோடு கூட பகிர்ந்து கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால், என்னிடம்