பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

185



குருவி உட்கார பனம்பழம் என்பார்களே அப்படி ஒன்று நடந்தது. இந்த அதிகாரியைப் பற்றி அன்று வெளியான தினமலர் பத்திரிகையில் டீக்கடைப் பேச்சில் ‘சமுத்திரத்திற்கே தண்ணி காட்டியவர்’ என்று அந்த அதிகாரியைப் பற்றி கண்டிக்கும் உரையாடல் இடம் பெற்றிருந்தது. இதை முதல்வரும், அவருடன் பணிபுரியும் உயர் அதிகாரிகளும் படித்திருப்பார்கள். அன்றைக்குப் பார்த்து நான் தான் அந்தச் செய்தியை போடவைத்தது என்று நினைத்திருக்கலாம். ஆனால், அதற்கு நான் பொறுப்பில்லை. என்னைப் போல சம்பந்தப்பட்ட அலுவலரிடம் திக்குமுக்காடிய தினமலர் தலைமைச் செய்தியாளரும், எனது நண்பருமான நூருல்லாதான் அந்தச் செய்திக்கு முழுமுதல் காரணம். இப்படி எத்தனைக் காகங்கள் உட்கார்ந்து, எத்தனை பனம்பழங்கள் விழுந்தனவோ. இதனால் தான்ோ என்னவோ, காக்காக் காரணங்களால் சிலர் முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.

கலைஞர் மூலம் வள்ளலாரையும், வைகுண்டரையும் மக்களிடையே கொண்டு எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். கலைஞரும் ஒரு ஆரம்பமாக, இந்த இரு ஆன்மீகப் போராளிகளுக்கும், குறும் படங்கள் எடுக்க கொள்கையளவில் முடிவெடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் முதல் தடவையாக இந்த இரண்டு ஆன்மீகப் போராளிகளையும், மக்களிடையே கொண்டு செல்வதற்கு கலைஞர் வாய்ப்பளித்திருக்கிறார். இந்த வாய்ப்புக்கள் ஆல்போல் தழைத்து, அருகு போல் வேரூன்ற கலைஞர் நமக்கு தேவைப்படுகிறார்.

சாமிப்தோப்பு வைகுண்டரே கலைஞரின் தலைப்பாகையை வலுப்படுத்தட்டும், வடலூர் வள்ளலாரே தமிழ் வழிபாட்டை செய்விக்கட்டும். இதற்கு கலைஞரே தொடரட்டும்.